கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் ஆண்களுக்கு இரு மடங்கும், பெண்களுக்கு மூன்று மடங்கும் இதய நோய் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோய் வகைகள்: இன்சுலின் சுரப்பு முற்றிலும் இல்லாத சர்க்கரை நோய்,போதுமான அளவுக்கு அல்லது மிகவும் குறைவாக இன்சுலின் சுரத்தல் என இரண்டு வகை சர்க்கரை நோய்கள் உள்ளன. இப்போது மூன்றாம் வகையாக இரண்டு வகைகளும் கலந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரும் உண்டு.
சரியான உடல் எடையும், தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அப்படியே பாதிக்கப்பட்டாலும் எடை குறைவு, உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டினை உணவு ஆலோசகர் கூறியபடி கடைப்பிடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
சர்க்கரை நோய்க்கும், இதய நோய்க்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் போனாலும், தற்போதைய ஆராய்ச்சியின்படி சர்க்கரை நோய் உள்ளவர்களின் இடது வென்ட்ரிக்கிள் (ரத்தக் குழாய்) பாதிக்கப்படுவதால் மாரடைப்பு ஏற்படும் நிலைக்கு ஆளாகின்றனர்.
சர்க்கரை நோய், ரத்த குழாய் நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களுடன் மிகுந்த தொடர்புடையது. சில ஆராய்ச்சிகள் மூலம் 25 சதவீத மக்கள், கால்கள் மற்றும் பாதத்தின் நரம்புகளில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களே என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களில் 7 சதவீதம் பேருக்கு பாதிப்பின் தீவிரம் காரணமாக கை-கால், விரல்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நோயின் தீவிர பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.
சர்க்கரை நோய் உள்ளோருக்கு இதய ரத்தநாள பாதிப்பு மிகவும் எளிதாக ஏற்படுவது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே 5 ஆண்டுகளாக சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளோர், இதய அடைப்புக்கான அறிகுறிகள் ஏதுமிருப்பின்-அதாவது நெஞ்சுவலி போன்றவற்றை அனுபவித்திருந்தால் அவர்கள் இதய அடைப்பு ஆய்வுச் சோதனை செய்து கொள்ள வேண்டும். அதாவது “டிரட் மில்’ பரிசோதனை ஓடுபொறிச் சோதனை) செய்து கொள்வது அவசியம். ஆரம்ப காலத்திலேயே இந்தச் சோதனையை மேற்கொண்டால், இதய புறவழி நாள அறுவை சிகிச்சை (Bypass) மற்றும் ரத்த நாளச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை (Angioplasty) போன்றவற்றைத் தடுக்கலாம்.
சென்னை நந்தனம் ஆக்ஸிமெட் மருத்துமனையில் உலக சர்க்கரை நோய் தினத்தன்று (நவம்பர் 14) இந்த அடைப்புச் சோதனையை புறநோயாளியாக மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு...
ஆக்ஸிமெட் மருத்துவமனை, அண்ணா சாலை, நந்தனம், சென்னை.
தொ.பே.: 044 42131010/1014/1016,
மின்னஞ்சல்: www.oxymedhospitals@yahoo.com
இணையதளம்: www.oxymedhospital.in