இஷ்ட தெய்வங்களை அறிவது எப்படி?




 

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே !  
                                            – தாயுமானவர்-

ஜோதிடம் என்பது பார்வதி தேவி, பரமேஸ்வரரிடத்தில் கேட்டதால் கிடைக்கப்பெற்ற அருமையான பொக்கிஷம். ஆம், தாய் பரமேஸ்வரி, எல்லா உயிர்களையும் படைத்த பின்னர் அருமையான மனிதப் பிறவியை படைத்தது அவர்களுக்கு தாம் பெறப்போகும் நன்மை தீமைகளை முன்கூட்டியே அறிவதற்காக முனிசிரேஷ்டர்களிடம் விவாதித்து கிடைத்தவை தான் இந்த ஜோதிடம். 

இதில் யாக்ஞயவல்கியர், பராசரர் போன்றவர்களின் பங்கும் அதற்கடுத்து வந்த காளிதாஸர் உள்பட பல ஜோதிடத்தில் கூறியவைகளை தான் இன்றும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இதில் நாமாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. புரிதலின் மூலமாக சிலர் தெள்ள தெளிவாக அதனை விளக்குவர். 

ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக பாகை பெற்றுள்ளதோ அதுவே ஆத்ம காரகர் ஆகிறது. நவாம்சத்தில் உள்ள ஆத்மகாரக கிரகம் காரகாம்ச லக்கினம் என்றும் அதிலிருந்து வரும் பன்னிரண்டாம் வீடு அல்லது ராசியே நமது இஷ்ட தேவதைக்கு உரியது. 

இந்த வீட்டில் இருக்கும் கிரகம் / கிரகங்கள் நாம் தேர்ந்தெடுத்த தெய்வத்தை தீர்மானிக்கின்றன, இருப்பினும், இந்த வீடு காலியாக இருந்தால், வீட்டின் கிரகத்தின் இறைவன் குறியீடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதனை தீர்மானிக்கிறது.

அது யாதெனில், காரகாம்ச லக்கினம் வீட்டிலிருந்து பன்னிரண்டாம் வீட்டில் வசிக்கும் / இருக்கும் கிரகம் அல்லது அந்த வீட்டின் அதிபதியின் படி, வழிபட வேண்டிய தெய்வங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

சூரியன்:      சிவன், ஸ்ரீராமன்
சந்திரன்:     கௌரி தேவி, லலிதா தேவி, சரஸ்வதி தேவி, ஸ்ரீ கிருஷ்ணர்
செவ்வாய்:  அனுமன், ருத்ர தேவர், கார்த்திகேயர் (சுப்ரமணியர்), ஸ்ரீ நரசிம்மர்
புதன்:            விஷ்ணு, ஸ்ரீ புத்தர்
வியாழன்:   ஹயக்ரீவர், விஷ்ணு, இந்திரன், தத்தாத்ரேயர், வழிகாட்டி /ஆசிரியர்
சுக்கிரன்:    லட்சுமி தேவி, பார்வதி தேவி
சனி:             விஷ்ணு, பிரம்மா
ராகு:            துர்கா தேவி, ஸ்ரீ நரசிம்மர்
கேது:          விநாயகப் பெருமான்

விஷ்ணு பகவான் இந்து மும்மூர்த்திகளில் ‘பாதுகாப்பவர்’ என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவர் முக்தியை அடைவதில் இன்றியமையாததாகக் கருதப்படும் சுதர்சன சக்கரத்தை ஏந்தியதால், ஒவ்வொரு நபரையும் மோட்சத்தை நோக்கி எளிதாக வழிநடத்தும் தெய்வமாக அவர் கருதப்படுகிறார். அத்தகைய நபர்களுக்கு, பின்வரும் பட்டியலில் விஷ்ணுவின் குறிப்பிட்ட வடிவங்கள்(அவதாரம்) உள்ளன, அவர்கள் தங்கள் இஷ்ட தேவதையாக வணங்க வேண்டும்:

சூரியன்:     ராமர்
சந்திரன்:     பகவான் கிருஷ்ணர்
செவ்வாய்:   நரசிம்மர்
புதன்:       புத்த பகவான்
வியாழன்:       வாமன பகவான்
சுக்கிரன்:   பரசுராமர்
சனி:        கூர்ம பகவான்
ராகு:        வராக வடிவம்
கேது:        மத்ஸ்ய வடிவம்

இந்தக் கட்டுரை உங்கள் இஷ்ட தேவதையைக் கண்டறியவும், பின்பற்ற வேண்டிய சடங்குகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்கவும் உதவும்.

குறிப்பு : சிலர், இஷ்டதெய்வத்தை ஏற்கெனவே வழிபாடு செய்து வருவார்கள். அது அவர்களாகவே பூர்வபுண்ணிய சம்பந்தத்தால் அது தெரிந்திருக்கும். அப்படி இஷ்டதெய்வத்தை வழிபாடு செய்வதால் ஒரு ஜாதகர் தாம் பெற நினைக்கும் நியாயமான அனைத்தையும் பெறுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். அந்த தெய்வங்களுக்குரிய  அபிஷேகம், அர்ச்சனை, ஸ்லோகங்கள், பாடல்கள் போன்றவையால் நிச்சயம் நன்மையை அதிகமாக பெறுவர்.

உதாரண ஜாதகம், ஜோதிடம் அதிக அளவு தெரியாதவரும் புரிந்து கொள்வதற்காக ..

மேற்கண்ட ஜாதகத்தில் அதிக பாகை கொண்ட ஆத்ம காரகர், செவ்வாய் . இவரே காரகாம்ச லக்கினாதிபதி ஆகிறார். இதனை லக்கினமாக கொண்டு அம்ச சக்கரத்தில் இதற்கு 12ஆம் இடத்தை காணும்போது அங்கு இருக்கும் கிரகம் கேது ஆகும். இது குறிப்பிடும் தெய்வமே, விநாயகர் இந்த ஜாதகருக்கு இஷ்டதெய்வம் ஆகும்.

சரி, இங்கு கிரகமே இல்லை எனில் இந்த ராசியின் அதிபதி செவ்வாய் ஆவதால், இந்த கிரகத்தின் தெய்வம் அனுமான் / முருகர் / நரசிம்மர் இஷ்ட தெய்வமாகிறார் .

தொடர்புக்கு : 98407 17857

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற… ‘தினமணி’யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்…
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G







நன்றி Hindu

(Visited 10073 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + nine =