வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… தம




தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 2250 தற்காலிக அடிப்படையிலான துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து வரும் 31.10.2023 க்குள் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 2250

பதவி: துணை செவிலியர்
பதவி: கிராம சுகாதார செவிலியர்

சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொது சுகாதாரத் துறை இயக்குநகரத்தால் வழங்கப்படும் இரண்டு ஆண்டு துணை செவிலியர் அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பெது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநரகத்தால் வழங்கப்படும் 18 மாத பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரபில்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  நேர்முகத் தேர்வோ, எழுத்துத் தேர்வோ எதுவும் நடத்தப்படாது.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 மற்ற அனைத்து பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
 

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற… ‘தினமணி’யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்…
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G







நன்றி Dinamani

(Visited 10021 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − six =