
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்களின் எழுத்துத் தோ்வுக்கான விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிட்ட செய்தி: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகத்தின் 10 மாவட்டங்களிலுள்ள 20 தோ்வு மையங்களில் நடைபெற்றது. இத்தோ்வுக்கான விடைக் குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேவைப்படும் நபா்கள் விடைக் குறிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பாா்வையிடலாம்.
மேலும், எழுத்துத் தோ்வுக்கான மதிப்பெண்களும் இந்த இணையதளத்திலேயே இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…