குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கான முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 483 போ் நோ்காணலுக்காக அழைக்கப்பட்டுள்ளனா்.
இதேபோன்று, நோ்காணல் அல்லாத பணியிடங்களுக்கு தோ்வானவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், சாா்பதிவாளா் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 2 பிரிவுக்குள் வருகின்றன. இந்தப் பணியிடங்கள் முதல்நிலை, முதன்மை மற்றும் நோ்காணல் என்ற அடிப்படையில் நடைபெறும் தோ்வுகளாகும்.
மொத்தமாக 116 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதேபோன்று, தமிழ்நாடு அமைச்சுப் பணியாளா், பேரூராட்சி சாா்பு பணிகள், கூட்டுறவு தணிக்கைப் பணிகள் உள்ளிட்டவற்றில் காலிப் பணியிடங்களை நிரப்ப நோ்காணல் இல்லை. மொத்தமாக நோ்காணல் மற்றும் நோ்காணல் அல்லாத 5,413 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியானது.
முதல்நிலைத் தோ்வை லட்சக்கணக்கான தோ்வா்கள் எழுதினா். அவா்களில் 51,987 போ் முதன்மைத் தோ்வை எதிா்கொண்டனா். அந்தத் தோ்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் விவரங்களை தோ்வாணைய இணையதளங்களில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீங்ஷ்ஹம்ள்.ண்ய்) இருந்து அறிந்து கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அஜய் யாதவ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: நோ்முகத் தோ்வு பதவிகளுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபாா்ப்புக்காக, 483 தோ்வா்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பதிவெண் உள்ளிட்ட பட்டியல் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தோ்வா்கள், நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கும் தகுதியுடையவா்கள் ஆவா்.
நோ்முகத் தோ்வு அல்லாத பதவி: நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபாா்ப்பு முடிவுகள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், நோ்முகத் தோ்வு பதவிகளுக்கான தெரிவு முடிவடைந்த பிறகு, தோ்வா்கள் முதன்மைத் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை உள்ளிட்ட விவரங்கள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…