Army Recruitment Camp

அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய ராணுவத் தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க மார்ச் 22-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத் தில் அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற் றும் தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த திருமணமா காத ஆண்கள் பங்கேற்கலாம். இதற்கு மார்ச் 22 ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும்.

www.joinindianarmy.nic.in

விருப்பமுள்ளவர்கள் என்ற இணையதளத்திவ் விண்ணப்பிக்கலாம். அக்னிவீரர்க ளின் ஆள்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்ப டும். முதல் கட்டம் ஆன்லைனில் கணினி அடிப்படையிலான எழுத்து தேர்வு, இரண்டாம் கட்டமாக உடற்தகுதி தேர்வு. ஆன்லைன் தேர்வு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் நடைபெறும்.

இந்திய ராணுவத்தில் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நியா யமாகவும், வெளிப்படையாகவும் மற்றும் தகுதியின் அடிப்ப டையில் மட்டுமே. தேர்வு அல்லது ஆள்சேர்ப்புக்கு எந்த நிலை யிலும் லஞ்சம் பெறப்படுவதில்லை. தகுதியற்ற நபர்கள் ஆள் சேர்ப்பு முகவர்கள் என கூறினால், அவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

எனவே, அக்னிபத் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஆள் சேர்ப்பு முகாமில் தகுதியானவர்கள் பங்கேற்று இந்திய ராணு வத்தில் பணிக்கு சேரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

(Visited 1007 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − six =