Construction Recruitments

இஸ்ரேலில் கட்டுமானப் பணியாளர்கள் வேலைக் காக விண்ணப்பிக்கலாம் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குந ருமான சி.நா.மகேஸ்வரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இஸ்ரேலில் அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கும் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். 10,000 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், 3 ஆண்டுகள் பணி அனுபவமுள்ள 25 முதல் 45 வய துக்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.1.37 லட்சம் வரை பெறலாம்.

விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in எனும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளத்தில் மார்ச் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், Ovem cnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் விவரங் கள்,விண்ணப்பப் படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலை அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் மற்றும் தொலைபேசி எண் 044-22505886, வாட்ஸ்ஆப் எண் 95662 39685 மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

(Visited 10036 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twelve =