உங்களுக்கு 'பி' ரத்த வகையா? ஆராய்ச்சியில் வெளியான முக்கிய தகவல்!




பி ரத்த வகை கொண்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியிருக்கிறது.

பொதுவாகவே, மக்கள் இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். இளைஞர்கள் என்றாலே அதிக உற்சாகம், துள்ளலுடன் இருப்பார்கள். வயதாக வயதாக அந்த உற்சாகம் குறைந்துவிடும். துள்ளல் சற்று நடுக்கமாக மாறிவிடும்.

வாழ்வில் பார்க்கும் அனைத்துமே அழகாகத் தோன்றுவது இளமைக்காலத்தில்தான். எனவேதான், இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் மனிதர்கள் விரும்புவார்கள். ஆனால், யாருமே கடைசி வரை இளமையாக இருக்க முடியாது.

இது மற்ற ரத்த வகைக்கு வேண்டுமானால் பொருந்துமாம். ஆனால் பி ரத்த வகை உடையவர்கள் அவ்வாறு இல்லையாம். அவர்கள் மற்ற ரத்த வகையினரை விடவும் அதிக காலம் இளமையாக இருப்பார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ரத்த வகையில் ஏ, பி, ஓ. ஏபி என நான்கு வகைகள் உள்ளன. இதில், நெகடிவ், பாசிடிவி என பிரிக்கப்படும். இந்த நிலையில்தான், மனிதர்களின் வாழ் முறைக்கும் அவர்களது ரத்த வகைக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்று ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

அதில் கிடைத்திருக்கும் தகவலின்படி, பி ரத்த வகை உள்ளவர்களின் இரத்த சிவப்பணுக்களில் பி எனும் ஆன்டிஜென் உள்ளது. இது ஏ ஆன்டிஜெனுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. அது மட்டுமல்லாமல், பி ரத்த வகையில் சிறந்த செல்லுலார் சீரமைப்பு மற்றும் மீளுருவாக்கும் திறமை போன்றவை அதிகப்படியாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து கடந்த 2004ஆம் ஆண்டு டோக்யோவில் 100 வயதைக் கடந்து வாழ்ந்து வந்த 269 பேரின் வாழ்முறை மற்றும் ரத்த வகையை ஆய்வு செய்த போது, அதிக நாள்கள் வாழ்பவர்களில் பி ரத்த வகை உடையவர்கள் அதிகம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இது தொடர்பான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.





நன்றி Hindu

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + five =