பாதுகாப்புத் துறை விஞ்ஞானிக்கு அரிய சிகிச்சை! 5 சிறுநீரகங்கள்.. ஆனால்!




மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வரும் விஞ்ஞானி தேவேந்திர பர்லேவாருக்கு நடத்தப்பட்ட மூன்றாவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன் மூலம் அவரது உடலில் 5 சிறுநீரகங்கள் உள்ளன.

47 வயதாகும் விஞ்ஞானியின் உடலில் ஐந்து சிறுநீரகங்கள் இருந்தாலும், ஒன்றுமட்டும்தான் செயல்பாட்டில் உள்ளது.

உலகிலேயே, இதுபோன்று மூன்றாவது முறை மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டிருக்கும் முதல் நபராகவும் இவர் மாறியிருக்கிறார். மருத்துவத் துறையினரும், ஒருவருக்குப் பொருந்தக் கூடிய தானமாக சிறுநீரகம் கொடுக்கும் நபர் கிடைப்பதே அரிது என்பதால், இவருக்கு மூன்றாவது முறையாக மூளைச் சாவடைந்த விவசாயி ஒருவரின் சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

இவரது உடலில் ஏற்கனவே இருந்த இரண்டு சிறுநீரகங்களும் வேலை செய்யாததால், மூன்று முறை தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடைசியாக பொருத்தப்பட்டிருக்கும் ஒரே ஒரு சிறுநீரகம் மட்டுமே தற்போதைக்கு செயல்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சிறுநீரக அழற்சி நோயால் பர்லேவார் அவதிப்பட்டு வந்துள்ளார். பல முறை டயாலிசிஸ் நடத்தப்பட்டு, 2011ஆம் ஆண்டு அவரது தாயிடமிருந்து சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டு அறுவைச்சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. ஆனால் அது ஓராண்டுதான் வேலை செய்தது. 2012ஆம் ஆண்டு மற்றொரு உறவினரிடமிருந்து சிறுநீரக தானம் பெறப்பட்டு மீண்டும் அறுவைச் சிகிச்சை நடந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு கரோனா தாக்கிய போது, அவரது நான்காவது சிறுநீரகம் செயலிழந்தது. அது முதல் அவர் டயாலிசிஸ் செய்து வந்தார்.

இந்த முறை, அவர் சிறுநீரக தானம் பெறுவதற்கு கடந்த ஆண்டு பதிவு செய்து, கடந்த ஜனவரி மாதம் மூளைச் சாவடைந்தவரின் சிறுநீரகம் பெறப்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் சிறுநீரகங்களை எடுப்பது மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், இருக்கும் சிறுநீரகங்களுக்கு இடையே புதிய சிறுநீரகத்தைப் பொருத்தி மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை செய்துள்ளனர்.

தற்போது குணமடைந்து வரும் பர்லேவால், இனி தான் டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டியதில்லை என்று நினைக்கும்போது நிம்மதியாக இருப்பதாகவும், மருத்துவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.





நன்றி Hindu

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 16 =