ஜீன்ஸ் அணியும்போது கவனிக்க வேண்டியவை..
ஜீன்ஸ் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகளை அணிந்தாலும் மழைக்காலத்தில் சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இறுக்கமான உடைகள் அணியும்போது காற்று உட்புகாமல், பாக்டீரியா தொற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக, கல்லூரி செல்லும் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. எனவே, கல்லூரி செல்லும் பெண்கள் வாரம் முழுக்க ஜீன்ஸ் அணியாமல் அவ்வப்போது தளர்வான ஆடைகளையும் அணிவது நல்லது.
அதிக வெப்பமான இடங்களில் பணியாற்றுவோர் அல்லது வெயிலில் அவ்வப்போது வெளியே செல்ல வேண்டியவர்கள் ஜீன்ஸ் அணிவதைக் குறைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
கால்களை இறுகப் பிடிக்கும் ஜீன்ஸ் ஆடைகளை அணிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதாவது இறுக்கமான ஜீன்ஸ் அணிந்துகொண்டு செல்லும்போது, கால்களை மடக்கி அமர்வது கால்களை செயலிழக்கச் செய்துவிடும் என்பது மருத்துவரீதியிலான உண்மையாம். அதாவது இறுக்கமான ஜீன்ஸ் அணியும்போது கால்களை மடக்கி அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.