ஆரோக்கியமாக வாழ ஆசையா? 8 பழக்கங்கள்தான்! ஹார்வர்டு மருத்துவரின் டிப்ஸ்




வயிற்றில் இருக்கும் சீரான நுண்ணுயிரிகள் நோய் தடுப்பு இயக்கமாக, சத்துகளை கிரகிக்க உதவுகிறது. அதுவே, சீரற்ற நுண்ணுயிரிகள் வயிற்றிரைச்சல், அஜீரணம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும்.

எனவே, வயிறை ஒருவர் சரியாக பராமரித்தாலே போதும் என்கிறார் சௌரவ் சேதி.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காலையில் எழுந்ததும் கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்கள் குறித்து விவரித்துள்ளார்.

இவரது டிப்ஸ் எல்லாமே, அறிவியல்பூர்வமாக பரிசோதிக்கப்பட்டு, உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் மிக எளிய வழக்கங்கள் என்கிறார்.

சூடான நீருடன் நாளைத் தொடங்குங்கள் என்கிறார். 7 – 8 மணி நேர உறக்கத்துக்குப் பிறகு நமது உடல் நீர்ச்சத்தை சற்று இழந்திருக்கும். எனவே, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரை அருந்தினால், அது வயிறு தனது வழக்கமான வேலையைச் செய்வதை எளிதாக்கும்.

கூடுதல் டிப்ஸ்: இதில் ஒரு சில சொட்டு எலுமிச்சை சாறு பிழிந்தால், குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும்.

காலையில் வெறும் வயிற்றில் காபி அல்லது தேநீர் அருந்துவதால் ஏற்படும் எரிச்சல் போன்றவை தவிர்க்கப்படும்.

ரத்த ஓட்டத்தை சீராக்கும்

அடுத்து காலை உணவை ஜீரணம் செய்வதற்கு ஆயத்தமாகும்.

உடல் பயிற்சி எல்லாம் வேண்டாம். உடலை சற்று அசைத்தால்கூட போதும். கைகளை வீசி நடப்பது, அமர்ந்து எழுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற மிக மிக எளிதான அசைவுகளை செய்யலாம்.

சுமார் 10 – 15 நிமிடங்களாவது கைகால்களை அசைத்து குனிந்து நிமிர்ந்து உங்களுக்குத் தெரிந்ததை செய்யலாம்.

நார்ச்சத்து உணவுகளைத் தேடுங்கள்

உலர் பழங்கள், கொட்டை வகைகள் சேர்ந்த ஓட்ஸ் கஞ்சி, பாதாம் பால், வாழைப்பழம் போன்றவை ஏற்றது. ஒரு நாள் காலை உணவில் 5 – 8 கிராம் நார்ச்சத்துள்ள உணவாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

மதிய உணவில் புரதம்

செரிமாணப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய புரதம்தான் தேவை. எனவே மதிய உணவில் நிச்சயம் புரதம் இருக்க வேண்டும். கூடுதலாக நார்ச்சத்தும் சேர்ந்துகொண்டால் அருமை. தயிர், தேன், பருப்புகள், முட்டை, பன்னீர் போன்றவற்றில் புரதம் உள்ளது.

இது சற்றுக் கடினம்தான்… சாப்பிடும்போது போன் பார்க்க வேண்டாம்

போனை பார்த்துக் கொண்டே சாப்பிடுவதால் என்ன நேரிடும் என்றால், அதனால் ஏற்படும் அழுத்தத்தை உடல் எதிர்கொள்ளும். ஜீரண சக்தி குறையும். சிலர் அதிகம் சாப்பிடும் அபாயம் உள்ளது. மூளை போனைப் பார்த்துக் கொண்டிருக்கும். போதும் என வயிறு சொன்னதை கவனிக்காமல் விட்டுவிடும் அபாயம் உள்ளது போல.





நன்றி Hindu

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =