கஞ்சா 10-15% ஜோடிகளின் கருவுறாமைக்கு காரணமாக அமைகிறது. மேலும் இந்தப் பிரச்னைக்கு கஞ்சா புகைக்கும் ஆண்கள்தான் காரணம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணு இயக்கம் மற்றும் சாதாரண உருவ அமைப்பைக் கொண்ட விந்து உயிரணுக்களின் சதவிகிதம் உள்ளிட்ட பல விந்து அளவுருக்களின் பகுப்பாய்வு மூலம், ஆண் மலட்டுத்தன்மை கண்டறியப்படுகிறது. கஞ்சாவின் ஒருவகையான மரிஜுவானா எனும் போதை வஸ்து, ஆண்களின் இனப்பெருக்கத்தை பாதித்து, உடலியல் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் பிளாஸ்மா அளவைக் குறைத்தல், விந்தணுக்களின் குறைபாடு, அசாதாரண உருவத்துடன் விந்தணுக்களின் உற்பத்தி, விந்தணு இயக்கம் மற்றும் உறுதித்தன்மையைக் குறைத்தல் போன்ற பிரச்னைகளையும் அதிகரிக்கச் செய்யும். செமினோமா எனும் கிருமியால் உயிரணுக் கட்டிகள் ஏற்படுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.