உங்கள் இதயம் வழக்கத்தை விட வேகமாக துடிக்கிறதா?




திடமான உடல் திறன் மற்றும் செயல்திறனுடன் விளங்க வாழ்நாள் முழுவதும் வலுவான எலும்புகள் முக்கியம். உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் இதுதான். பலவீனமான எலும்புகள் விரும்பிய உடல் சார்ந்த லட்சியங்களை அடைய விடாமல்  தடுக்கும். மேலும் கடுமையான காயங்களைத் தரும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது ‘சீனியர் சிட்டிசன்களின்’ முக்கிய பிரச்னை என்றும், இது ஆரம்ப காலங்களில் கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதும் உண்மைதான். பெரும்பாலான வயதானவர்களில் இடுப்பு, முதுகெலும்பு மற்றும் முன்கை எலும்பு முறிவுகள் (40- 65 வயதுடையவர்கள்) காணப்படலாம் என்கிறது ஒரு ஆய்வு. என்றாலும், நீங்கள் எலும்பு முறிவை அனுபவித்தால், மற்றும் ஆஸ்டியோபோரோசிஸின் அறிகுறிகளையும் கண்டால், ஆரம்பத்திலேயே இதனை மாற்றியமைக்க முடியும். மிகவும் தாமத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். எனவே எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், குறிப்பாக எலும்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடி கவனிப்புத் தேவை.

கல்யாண், ஃபோர்டிஸ் மருத்துவமனையின் கூட்டு மாற்று மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எஸ் ராகவேந்திரன் இது குறித்து, கவனிக்க வேண்டிய சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்,  

அடிக்கடி உடையக் கூடிய நகங்கள்

நகங்களை உடைவது ஒன்றும் ஆச்சரியமல்ல, ஆனால் அதில் ஆணி பிளவு அல்லது அடிக்கடி உடைந்தால், அது ஒரு அறிகுறியாக இருக்கலாம். பல காரணிகளால் நகங்களில் உடைவு ஏற்படக்கூடும், ஆனால் இரண்டு மிக முக்கியமான காரணங்கள் கால்ஷியம் மற்றும் கொலாஜன் குறைபாடுகள். பால் பொருட்கள், பச்சை இலைக் காய்கறிகள், பெர்ரி, சோயா, காலே, மத்தி மற்றும் ப்ரோக்கோலி ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் கால்ஷியம் குறைபாட்டை சமாளிக்க முடியும். கொலாஜன் புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான கோழி, மீன், பீன்ஸ், முட்டை மற்றும் பால் பொருட்கள். இந்த உணவு வகைகளுடன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, கூடுதல் மருந்துகளையும் பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் நீங்கும்.

ஈறு மற்றும் பற்களில் பிரச்னை

சிலருக்கு ஈறுகள் தாடை எலும்பிலிருந்து ஒதுங்கிவிடும். இது தாடைகளைப் பெரிதும் பாதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகுதான் இது வெளிப்படுகிறது.  ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்கள் இளம் வயதிலேயே பற்களை இழக்க மூன்று மடங்கு சாத்தியம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் பல் மருத்துவரை சந்தித்து சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது நல்லது.

எலும்புப் பிடிப்பு மற்றும் வலி 

அடிக்கடி தசைப்பிடிப்பு மற்றும் வலி ஏற்பட்டால், தாது அல்லது வைட்டமின் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இந்தச் சிக்கல் தொடர்ந்தால் அது எலும்பு இழப்புக்கு வழிவகுக்கும்; உடனடியாக நிவாரணம் பெற உங்கள் மருத்துவரை அணுகவும்.

இதயம் வழக்கத்தை விட வேகமாக துடிக்கிறதா?

உங்கள் உடல் எந்தவொரு உடல் பணியையும் மேற்கொள்ளும்போது உங்கள் இதயம் நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்பதை இது குறிக்கிறது. ஒரு நபரின் இதயத் துடிப்பு அவரது உடற்பயிற்சி மற்றும் உடல் திறனின் பிரதிபலிப்பாகும். மிக அதிகமாக இதயத் துடிப்பு இருக்கும் சமயங்களில் அமர்ந்த நிலையிலிருந்து எழுந்திருக்கும் போது இடுப்பு, அல்லது முதுகெலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்கிறது ஒரு ஆய்வு. 

பல மணி நேரம் அமர்ந்தபடி வேலை செய்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறையை பின்பற்றும் நபர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படக்கூடும். இவர்கள் அதிகப்படியாக இதயத் துடிப்பு கொண்டவர்கள், குறிப்பாக அதிக எடை கொண்டவர்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது. நீங்கள் 30 நிமிட விறுவிறுப்பான நடைபயிற்சி, டென்னிஸ், ஓட்டம் மற்றும் நடனம் பயிற்சி செய்யலாம்; ஜூம்பா அல்லது ஏரோபிக் வகுப்புகக்கும் சென்று முறையாகக் கற்றுக் கொள்ளலாம்.

ஆல்கஹால் உட்கொள்ளல்

மதுவை பாட்டில் பாட்டிலாக் குடிப்பதுதான் பலரின் பிரச்னை. 2-3 அவுன்ஸ் ஆல்கஹாலை தினமும் உட்கொள்வது எலும்புகளுக்கு கெடுதல் என்கிறது ஒரு ஆய்வு. இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்களும் கூட குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடுகிறார்கள். அதிகப்படியாக மது அருந்தும் பழக்கத்தினால் எலும்பு இழப்பு மற்றும் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள். 

புகை

தினசரி நான்கு சிகரெட்டுகளுக்கு மேல் புகைப்பது எலும்புகளில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. இது எலும்பு வலுவிழப்பு, தாதுக்கள் இழப்பில் தொடங்கி இறுதியில் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுக்கு வழிவகுக்கிறது.

மருத்துவ வரலாறு

தைராய்டு, ஆஸ்துமா, மாதவிடாய் நின்ற பிந்தைய காலகட்டம், மருந்துகள், ஸ்டெராய்டுகளில் உள்ள நோயாளிகள், எலும்புகள், மூட்டு வலிகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.





நன்றி Hindu

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − five =