உடல் எடையைக் குறைக்கும் தேநீர்! நீரிழிவு நோயிலிருந்தும் தப்பிக்கலாம்!!




உடல் எடையைக் குறைப்பது என்பது இன்று பலருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. உடல் பருமனால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் என உடலில் அடுத்தடுத்த நோய்களும் ஏற்படுகின்றன. இதனாலே சத்தான உணவைச் சாப்பிடுவதுடன் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உடல் எடை கூடுவதால் ஒருபக்கம் மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் ரீதியான பிரச்னைகளும் வருகின்றன.

உடல் எடையைக் குறைக்கவும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கவும் கலோரி குறைந்த அதேநேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் இருக்கின்றன. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். இதனால் உடலில் கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறைய வழிவகுக்குகிறது.

அவ்வாறு உடல் எடையைக் குறைக்க உதவும் பானம்தான் பிளாக் டீ, க்ரீன் டீ. முற்றிலுமாக பால், சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்த்தாலே உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதையும் படிக்க | கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சை செய்யலாமா? – நம்பிக்கையும் உண்மையும்!

பிளாக் டீ, க்ரீன் டீ, உடல் எடையைக் குறைக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவும் என்கிறார்.

சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சியுடன் இந்த தேநீரை அருந்தினால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம் என்கின்றனர்.

சாதாரணமாக டைப் 2 வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவர ‘ஒசெம்பிக்’ என்ற மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதத்தைக் குறைக்கவும் அதனால் ஏற்படும் இறப்பினைக் குறைக்கவும் உதவும் மருந்து.

ஒசெம்பிக் மருந்து, உடலில் ஜிஎல்பி1 எனும் ஹார்மோனைத் தூண்டச் செய்கிறது. இந்த ஹார்மோன்தான் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கச் செய்கிறது.

பிளாக் டீ, க்ரீன் டீ ஆகியவை ‘இயற்கையான ஒசெம்பிக்’ என்று கூறப்படுகிறது.

நோயெதிர்ப்பு

தேநீரில் உள்ள கேடசின் மற்றும் ஃபிளாவனாய்டு ஆகியவை சிறந்த நோயெதிர்ப்புப் பொருள்கள் ஆகும். அவை உடலில் உள்ள செல்களை, ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன, இது நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

இதய ஆரோக்கியம்

பிளாக் டீ, க்ரீன் டீ ஆகியவற்றில் உள்ள ஃபாலிபினால்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடலில் கொழுப்பினைக் குறைக்கவும், ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.

மன ஆரோக்கியம்

இதில் மிதமான அளவுள்ள காஃபின் புத்துணர்ச்சி, மனத் தெளிவைத் தரும். இதிலுள்ள எல்- தெனைன் என்ற அமினோ அமிலம் அமைதியாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த உதவுகிறது.

இதையும் படிக்க | கலப்பட மஞ்சளைக் கண்டறிவது எப்படி?

பக்கவாதம்

தொடர்ந்து தேநீர் அருந்துபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவு என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும், ரத்தம் உறைதலுக்கும்கூட உதவுகின்றன.

குடல் ஆரோக்கியம்

மூலிகை டீ, க்ரீன் டீ போன்ற சில தேநீர் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவும். இதனால் செரிமானம் மேம்படும்.

நீர்ச்சத்து

உடலில் நீர்ச்சத்து அவசியம். தேநீர் அருந்துவது உடலில் நீரேற்றத்தை அதிகரிக்க உதவும்.





நன்றி Dinamani

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 15 =