செவ்வாய் வலு இழந்த நிலையில் இருந்தால் சிலருக்கு நிலம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் நஷ்டமும் ஏற்படும். மேஷ லக்கினத்திற்கு இரண்டுக்கும் ஏழுக்கும் உரியவர் சுக்கிரன். அந்த இரண்டாம் வீடான ரிஷபத்தில் நான்குக்குரிய சந்திரன் உச்சம். இவர்களுக்கு நட்பாகவும், பொருளாதார உயர்வுக்கும் ஒரு முக்கிய காரணமாக ஒரு பெண்ணாக இருப்பாள். இவர்களுக்கு மிகவும் நட்பாக இருப்பது பெண்கள்தான் எடுத்துக்கட்டாக தாய், சகோதரி, மனைவி, மற்றும் தோழியாகவும் இருக்கலாம். சிறிதளவு உணவு இருந்தாலும் அதை பல்வேறு பதார்த்தங்களுடன் சூடாக உண்ணுவதில் சிறந்தவர்கள். இவர்கள் 60% காதல் திருமணத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். முக்கியமாகப் பக்தர்களுக்கு இலவச விடுதிகள் மற்றும் அன்னக்கூடங்கள் கட்டுவதில் முக்கிய பங்காற்றுவார்கள்.
மேஷத்திற்கு 3, 6 புதன் இவர்கள் புத்தகம் படித்து மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்குவதில் ஆர்வம் அதிகம். பணி என்று எடுத்துக்கொண்டால் எழுத்துதுறை, அரசு வேலை, காவல் அல்லது ஆளுமை துறையில் இருப்பார்கள். இவர்களுக்கு சூரியன், புதன், சனி, மற்றும் தொழில் பாவம் நன்றாக இருந்தால் அரசு வேலை கிட்டும். புதன் உச்சம் பெற்று 6,8 தொடர்பு பெரும்போது தோலில் பிரச்னை, நரம்பு பாதிப்பு, காது, மூக்கு, தொண்டை ஒரு சில குறைபாடுகள் ஏற்படும்.
குரு என்பவர் மேஷத்திற்கு 9,12-கும் உரியவர். பணத்தைப் பத்திரமாக சேமிப்பது, ரெட்டிப்பு ஆக்குவதில் வல்லவர்கள். இவர்கள் தெய்வ ஈடுபாட்டுடன், சரியான குருவைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். கோவில் திருப்பணிகள் செய்வதில் ஆர்வம் அதிகம் உண்டு. கோச்சார ராகு – ராசி, லக்கினத்தில் அல்லது 12ல் பயணம் செய்யும் காலம் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிட்டும். மேஷத்திற்கு முக்கிய எதிரி சனி. இவர் 10,11க்கும் உரியவர். இவர்களின் தொழில் என்பது முக்கியமாக செவ்வாய் 10ல் உச்சம் மற்றும் ஆட்சி பெற்ற நிலையில் இருந்தால் தொடர் உழைப்புடன் தொழிலில் மேன்மை பெறுவார். இவர்களுக்கு கர்மாவின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும் முடிந்தவரை மற்றவர்களின் பழிக்கு ஆளாகாமல் இருப்பது நன்று.
இவர்களுக்கு விரய சனி, ஜென்ம சனி, பாத சனி வரும் காலங்களில் கோச்சார சனி பகவானால் சிறு சிறு பாதிப்புகள் இருக்கும். இவற்றில் தசா புத்தியும் சேர்ந்தால் அதிக பாதிப்பு ஏற்படும்.
மேஷ ராசிக்கான பரிகாரம்
சங்கட சதுர்த்தி மற்றும் தேய்பிறை சஷ்டியில் விரதம் இருப்பது நல்லது. இந்த ராசிக்காரர்கள் முருகனுக்கு பால், தயிர், தேன், இளநீர் அபிஷேகம் செய்யலாம்.
அனுமனுக்கு வெண்ணை சாற்றி வழிபடுவது நன்று. ஒருமுறை பழனியில் உள்ள போகர் சித்தர் மற்றும் வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தன்வந்திரி சித்தர் ஜீவ சமாதிக்கு அருகில் அமர்ந்து தியானம் செய்வது நன்று.
Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com