பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதால் மன அழுத்தம்தான் ஏற்படும் என்கிறது ஆய்வு முடிவுகள்
பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்து மல்டி டாஸ்கிங் என்றும், அது மிகப்பெரிய திறமை என நினைத்திருந்தால் தவறு. மல்டி டாஸ்கிங் செய்வதால் மன அழுத்தம் ஏற்படும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சியொன்று.
ஒருவர் ஷாப்பிங் செல்ல முடிவெடுத்தால் அதை மட்டும் செய்வது நல்லது. ஒன்றுக்கும் மேற்பட்ட வேலையை ஒரே சமயத்தில் செய்யும் போது ஒன்றில் கவனம் பிசகி மற்றொரு வேலையில் கோட்டை விடுவதால் ஒரு வேலையோ அல்லது இரண்டுமோ பாதிக்கப்பட்டு, அதனால் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படலாம், அல்லது எதையும் ஒன்றி செய்ய முடியாமல், மனம் பாதிக்கப்படலாம்.
ஒருவர் ஷாப்பிங் சென்ற போது செல்ஃபோனில் பேசிக் கொண்டே பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குகிறார். ஆனால் அவர் திரும்பி வீடு வந்து சேர்ந்த போது தான் நிறைய பொருட்களை வாங்காமல் திரும்பி வந்ததும், தேவையற்ற சில பொருட்களை வாங்கிவிட்டதையும் உணர்ந்தால் எப்படி இருக்கும். தன் மீதே எரிச்சலும் கோபமும் அவருக்கு ஏற்டும். இதே போலத் தான் ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர், பின்னால் வரும் வண்டியின் ஹார்ன் சத்தம் கேட்காமல் போகவே, விபத்தில் சிக்கினார்.