சிவப்பு நிறம் பொதுவாக ஆற்றல்,வலிமை,எச்சரிக்கை ஆகியவற்றை இடத்திற்கு ஏற்றார்போல் குறிக்கும்.
பொதுவாக சிவப்பு நிறத்தின் மீது மனிதனுக்கு மிகப் பெரிய ஈர்ப்பு உள்ளது, இன்னும் சொல்லப்போனால் சிவப்பு நிறத்தை பார்த்தால் உடல் பலவீனத்தால் இரத்த ஓட்டம் குறைந்த ஒரு மனிதனால் தனது இரத்த ஓட்டத்தை கூட சீர்செய்து கொள்ள முடியும் என்பது ஆச்சரியத்திற்குரிய உண்மை.ஒரு சராசரி மனிதன் சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்ய சிவப்பு நிற உடை அணிவது நல்லது.
சிவப்பு நிறத்திற்கும் மனிதனின் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது மனிதன் உயிரோடு இருக்க இரத்தம் மிக முக்கியம் என்பது கல்வியறிவில்லாதவருக்கும் தெரிந்ததே. இரத்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சிவப்பணுக்களின் அளவு எவ்வளவு என்பதை தீர்மானிப்பதில் நாம் உண்ணக்கூடிய உணவு கூட சிவப்பு நிறத்தினால் ஆன காய்கறிகளோ அல்லது கனிகளோதான். இந்தப்பதிவில் நாம் உணவில் அவ்வப்போது சேர்த்து கொள்ள வேண்டிய சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் கனிகள் குறித்தும் அவை நமக்கு ஏற்படும் நன்மைகள் நம்மை எந்தெந்த நோய்களில் இருந்து காக்க வல்லது என்றும் பார்க்கலாம்.
சிவப்பு நிற காய்கறிகள்:
- பீட்ரூட்
- கேரட்
- தக்காளி
- சிவப்பு மிளகாய்
- சிவப்பு முட்டைகோஸ்
- சிவப்பு வெங்காயம்
- சிவப்பு முள்ளங்கி
- சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை
பழங்கள்:
- ஆப்பிள்
- மாதுளை
- சிவப்பு கொய்யா
- ஸ்ட்ராபெர்ரி
- தர்ப்பூசணி,
- செர்ரி பழம்
- செவ்வாழைப்பழம்
சத்துக்கள் :
- விட்டமின்கள்
- புரதம்
- பொட்டாசியம்
- சோடியம்
- மெக்னீசியம்
- பைட்டோ கெமிக்கல்
- ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் லைகோபின்
நன்மைகள் :
- ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நம் உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்றி உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
- பொட்டாசியம் நம் உடலுக்கு ஆற்றல் அளிப்பது, இதயநோய் உண்டாகாமல் தடுப்பது, மேலும் சரும பொலிவு மற்றும் பாதுகாப்பிற்கு உகந்தது.
- சோடியம் மற்றும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
- இதில் இயற்கையாய் அமைந்துள்ள லைகோபின் நம் ரத்தத்தில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
- விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி கண் குறைபாடுகள் வராமலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. சிவப்பு வெங்காயத்தில் அதிகம் உள்ள பைட்டோ கெமிக்கல் கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்க வல்லது.
இவ்வளவு நன்மைகளை நமக்கு அள்ளித் தருகின்ற சிவப்புநிற காய்கறிகளை நம் அன்றாட உணவில் தவறாமல் எடுத்துக்கொள்வது பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி வகுக்கும்.