ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 4 – புலவர்நத்தம் சிவன் கோவில் 




தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், புலவர்நத்தம் சிவன்கோயில் பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டு திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, அவையே அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள்  இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும்,  சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும்  பெற்றார்கள்.

ஆலங்குடிக்கு கிழக்கில் இந்திர தேவனால் இந்திர தீர்த்தமும் தென்கிழக்கில் பூனாயிருப்பு கிராமத்தில் அக்கினி தேவனால் அக்கினி தீர்த்தமும் தெற்கில் நரிக்குடி கிராமத்தில் யம தர்மரால் யம தீர்த்தமும் மேற்கில் பூந்தோட்டம் கிராமத்தில் வருண தேவனால் வருண தீர்த்தமும் வடமேற்கில் மருதூர் கிராமத்தில் வாயு தேவனால் வாயு தீர்த்தமும் வடக்கில் கீழ அமராவதி கிராமத்தில் குபேர தேவனால் குபேர தீர்த்தமும் வடகிழக்கில் சித்தன்வாழூர் கிராமத்தில் ஈசான்ய தேவனால் ஈசான்ய தீர்த்தமும் நிறுவி அஷ்டதிக் பாலகர்களே சிவலிங்க பிரதிஷ்டையும்  செய்தார்கள். 

அதன் அடிப்படையில் நிருதி பாகமான, ஆதி காலத்தில் பூளை வளநத்தம் என்று அழைக்கப்பட்ட புலவர்நத்தம் கிராமத்தில் நிருதி தேவனால் நிருதி தீர்த்தமும் நிருதீஸ்வரர் என்ற திருநாமத்தோடு லிங்க பிரதிஷ்டையும் செய்து பூஜித்து, அதுவரை கைவிட்டிருந்த தன் தொழிலை மீண்டும் பெற்றார், 

இந்த தலத்தை சங்க புலவர்கள், மகான்கள், பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் ஆகியோர் வழிபட்டு பரவசம் அடைந்துள்ளார்கள். ஆதலால் தன்னிகரில்லாத இத் திருத்தலத்தில் உள்ள நிருதி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானையும் அன்னை தர்ம சம்வர்த்தினியையும் வணங்குவோர் வாழ்வில் எல்லா வளமும் நிறைந்து வளம் பெற்று வாழ்வர். நிருதி பூமிக்கு அதிபதி என்பதால் இவரை வழிபட்டால் நிலம், மனை வாங்கும் யோகமும் கிட்டும். 

இறைவன்- நிருதீஸ்வரர் 
இறைவி- தர்மாம்பிகை

தொழில் முன்னேற்றம், மன அமைதி, மன உறுதி பெறவும், குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் பூசல் ஏற்ப்படுதலை தவிர்க்கவும் வில்வம் அல்லது பூளை பூவை சரமாக தொடுத்து சார்த்தி வழிபட்டால் நலம். கிழக்கு நோக்கிய இறைவன், அம்பிகை தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். முருகரின் மயில் வடக்கு நோக்கிய கொண்டுள்ளது சிறப்பு கரிய மாணிக்க பெருமாளும் உள்ளார்.

கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில், குரு தலமான ஆலங்குடியை தாண்டியதும் ஒரு கிமி தூரத்தில் புலவர்நத்தம் பேருந்து நிறுத்தம்  உள்ளது அதில் இருந்து மேற்கு நோக்கி சென்றால் கிராமத்தினை அடையலாம்.  ஊரின் முகப்பிலேயே  உள்ளது நிருதீஸ்வரர் திருக்கோயில். 

கிழக்கு நோக்கிய இறைவன்- இறைவி தெற்கு நோக்கி உள்ளார், வாயில் தென்புறம் உள்ளது, கோயிலுக்கு வடக்கில் நிருதி ஏற்ப்படுத்திய பெரிய குளம் உள்ளது.

கடம்பூர் விஜயன் 







நன்றி Hindu

(Visited 10041 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 4 =