வெண்ணையாகிய நான் உருவாகும் கதை எல்லோருக்கும் தெரியும். என்னை உருவாக்கிய பழங்கால மனிதர்கள் என் அருமையை புரிந்து சாப்பிட்டு வந்தார்கள்.தற்போது உள்ள காலத்தில், நான் ஒரு கொடிய அரக்கன் என்றும், என்னை உட்கொண்டால் மாரடைப்பு வந்துவிடும், உடற்பருமன் தொப்பை கூடிவிடும் என்று கொலஸ்ட்ராலை அதிகமாக்கி விடுவேன் என்று என் மீது தவறான கருத்துக்கள் உருவாக்கியும் என்னை பலர் உதறி தள்ளிவிட்டனர்.
ஆனால், நான் ஒரு போராளி. மனிதர்களுக்கு நன்மை பெருக்கவே நான் உருவாகிறேன். நான் அவர்களுக்குள் சென்று அவர்களுடைய உடலுறுப்புகளை பாதுகாக்க போரிடுகிறேன்.நான் இயற்கையாக பசுவின் பாலிலிருந்து வெண்ணையாக பிரிக்கப்படுகிறேன். என்னிடம் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘டி’, வைட்டமின் ‘இ’, துத்தகம், செலினியம், குரோமியம், அயோடின் இருக்கிறது.என்னை உட்கொள்வதால் கண்நோய்கள், உடல் சூடு, கண் எரிச்சல், கண்களில் பீளை சாடுதல் போன்றவற்றை குணப்படுத்துகிறேன்.
100 கிராம் உட்கொள்வதால் மனிதர்களாகிய உங்களுக்கு 21 கிராம் மோனோ அன் சாச்சுரேட், 3 கிராம் பாலி அன் சாச்சுரேட், 51 கிராம் சாச்சுரேட்டர் கொழுப்பு மற்றும் ஒமேகா- 3, ஒமேகா- 6, பேட்டி ஆசிட் உங்களுக்கு தருகிறேன்.இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் மூலம் ரத்த நாளங்களைப் பலப்படுத்துகிறேன்.கால்சியத்தை அதிகளவில் கொடுக்கின்றேன். பற்சிதைவைத் தடுக்கிறேன். பூரிதக் கொழுப்பு, புற்று நோயை குணப்படுத்தும் மற்றும் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளேன். தேவையான தாது உப்புகளை உடம்பு கிரகித்துக்கொள்ள உதவுகிறேன்.மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மை பயக்கிறேன். மேலும் என்னிடம் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இருதயத்திற்கு மிகவும் சிறந்தவையாகும்.
வைட்டமின்கள் எலும்பு வலுப்பெறுவதற்கு சிறந்ததாம். வைட்டமின் கே 2 வை தரும்போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் கொழுப்பு படிவதை தடுக்கிறது. நான் உடறபருமன் குறையவும் உதவுகிறேன்.என்னை உட்கொள்வதின் மூலம், உடல் மெருகேறும் பசி தூண்டுதலையும், தோலின் நிறத்தை கோதுமை போல் பழபழவென்றும், மற்றும் மலச்சிக்கலையும் போக்கி விடுகிறேன்.
என்னை மஞ்சள் பொடியோடு சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால், தோல் சுருக்கத்தை நீக்குகிறேன். முகம் பொலிவை தருகிறேன்.இன்னும் என்னை பற்றி ஏதாவது விசயங்கள் தெரிந்தால், மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். என்னை எவ்வளவு ஒதுக்கினாலும் நான் மக்களுக்கு எப்போதும் நன்மையாகவே இருப்பேன்..!!