மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!




lower_bp

 

50 வயதுக்கு மேல் பிரஸ்ஸர் மாத்திரைகள் போட்டுக் கொள்ளாத மனிதர்கள் இப்போது அரிதாகி வருகிறார்கள். பிரஸ்ஸர் மாத்திரைகள் என்பவை ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த தினந்தோறும் உட்கொள்ளுமாறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகின்றன. இந்த மாத்திரைகளைப் போட்டுக் கொள்ளாமல் இயற்கையான முறையில் ரத்த அழுத்தத்தை குறைக்க ஏதாவது வழிமுறை இருக்கிறதா என்றால், இல்லாமலென்ன  தினமும் ஆலிவ் இலைச்சாற்றுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் உண்டு என மருத்துவக் குழு ஒன்று தங்களது 8 வார தொடர் ஆய்வொன்றில் கண்டறிந்துள்ளது.

ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதற்காக தற்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கேப்டோப்ரில்லுடன் ஒப்பிடுகையில் ஆலிவ் இலைச்சாறு சிஸ்டோலிக் ரத்த அழுத்தத்தை 12 புள்ளிகள் வரை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறிப்பு: 

ரத்த அழுத்தம் என்பது சுத்த ரத்த நாளங்களில் உருவாகும் அழுத்த நிலை. இதயத்தால் வெளியேற்றப்பட்ட ரத்தம் ஆர்டெரிஸ் என்று சொல்லக்கூடிய சுத்த ரத்த நாளங்களில் ஏற்படுத்துகிற ஒரு அழுத்த நிலையை ஹைபர்டென்சன் என்கிறோம். இது இரண்டு எண்ணிக்கையில் குறிப்பிடப்படுகிறது. ஒன்று சிஸ்டோலிக் பிளட்பிரஷர். இது மேலே உள்ள எண்ணைக் குறிக்கும். அடுத்தது டயஸ்டோலிக் பிளட் பிரஷர். இது கீழே உள்ள எண்ணைக் குறிக்கும். உதாரணமாக மருத்துவர்கள் 120/80 mm of hg என்று எழுதுவார்கள். இதில் ஒன்றோ, இரண்டோ அல்லது இரண்டுமே அதிகமாக இருக்கலாம்.

பொதுவாக ஒரு மனிதனுக்கு 120/80 என்று ரத்த அழுத்தம் இருக்கும். இந்த ரத்த அழுத்தம் 140/90 என மாறும்போது ஹைபர்டென்சன் என்று குறிப்பிடப்படுகிறது.







நன்றி Hindu

(Visited 10028 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eight =