
கோப்புப்படம்
சென்னை: ஏப்ரல் 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையம் சார்பாக 2021 ஏப்ரல் 26 அன்று சென்னையில் நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம், கொவிட்- 19 பாதிப்புகள் அதிகரித்து வரும் காரணத்தால் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை, சென்னை பட்டியலின, பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தின்பிராந்திய வேலைவாய்ப்புத் துணை அலுவலர் சுஜித் குமார் சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
(Visited 10024 times, 31 visits today)