உஷார்! பற்களைச் சுத்தமாகப் பேணாவிட்டால் உணவுக்குழாய் கேன்சர் வர வாய்ப்பு!




gum_cancer

 

பல் ஈறுகளைத் தாக்கக் கூடிய நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களாலும் கூட உணவுக்குழாய் கேன்சர் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரிக்கலாம் என சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இவ்வகையில் தோன்றக் கூடிய கேன்சரானது அதன் துவக்க கட்டத்தில் கேன்சருக்கான அறிகுறிகள் எதையும் காட்டுவதே இல்லை. குறைந்த பட்சம் இவ்வகை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களில் 15% முதல் 25% நோயாளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருக்கு உத்திரவாதமுண்டு என்கிறது இந்த ஆய்வு. இந்த ஆய்வின் முதன்மையான நோக்கம் கேன்சரைப் பற்றிச் சொல்லி பயமுறுத்துவது இல்லை. பற்களை சுத்தமாகப் பராமரிப்பதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை மேம்படுத்துவது மட்டுமே இதன் குறிக்கோள் என்கிறது இந்த மருத்துவ ஆய்வின் அடுத்த கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர் குழு. 

மனித உடல் உறுப்புகளின் மிக எளிதாக பாக்டீரியாத் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய உறுப்புகளில் முதன்மையானவை பற்களே.

பற்களின் வழியாக பரவக்கூடிய உணவுக்குழாய் கேன்சரானது இளைஞர்களைக் காட்டிலும் முதியவர்களையே உடனடியாகத் தாக்கவல்லது, எனினும் இந்த நோய்த்தொற்றுக்கும் வயது பாகுபாடுகள் இன்று பலியானவர்களில் சிறூகுழந்தைகள் முதல் நடுத்தர வயதுள்ளவர்கள், முதியவர்கள் என அனைவருமே அடங்குவர். 

எனவே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பற்களில் ஏதேனும் பிரச்னைகள் எனில் அவற்றைத் தட்டிக் கழிக்காமலும், தவிர்க்க நினைக்காமலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம் என்பதை உணர வேண்டும். அது மட்டுமல்ல, தினமும் இருமுறை பற்களை சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. குழந்தைகளுக்கும் இளமை முதலே இந்தப் பழக்கத்தை உருவாக்கித் தொடரச் செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை என்பதை மறக்கக் கூடாது.

பல் ஈறுகளை பாக்டீரியாத் தொற்று வரக் காரணம்…

  • ஒவ்வொரு முறையும் உணவுண்டு முடித்ததும் நன்றாக வாய் கொப்பளித்து வாய்க்குள், பற்களில் சிக்கியிருக்கும் உணவுத் துணுக்குகளை வெளியேற்ற வேண்டும். 
  • பற்குழிகள், பல் சொத்தைப் பிரச்னைகள் இருந்தால் உண்ணும் உணவுப் பொருட்கள் அந்த இடுக்குகளில் சிக்கி வாய் கொப்பளித்தும் கூட அகற்ற முடியாமல் பற்களின் மேலும், பல் இடுக்குகளிலும் தங்கி விட்டால் அதனாலும் பாக்டீரியாத் தொற்று வரலாம். எனவே தினமும் இருமுறை பல் விளக்குவதை தொடர் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
  • ஃப்ரெஞ்ச் கிஸ் என்று சொல்லப்படக்கூடிய உதடுகளில் முத்தமிடும் வழக்கம் கொண்ட தம்பதிகள் ஒவ்வொரு முறை முத்தமிட்ட பின்பும் பற்கள் மற்றும் உதடுகளைச் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. ஏனெனில், மேலை நாடுகளில் மட்டுமல்ல நம் இந்தியாவிலும் கூட இப்போதெல்லாம் முத்தத்தால் பாக்டீரியாத் தொற்று ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு என்கிறது மருத்துவ ஆய்வேடு ஒன்று.







நன்றி Hindu

(Visited 10028 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + two =