மாதவிடாய் காலத்தின் போது பெண்கள் இந்த 3 தப்பை மட்டும் செய்து விடாதீர்கள்!




02-stomach-pains-IBD-

 

பெண்ணாய் பிறந்த அனைவரும் தாய்மை அடையத் தயாராவதற்கான முதல் படி இந்த மாதவிடாய். இதை வைத்து ஒரு பெண்ணின் உடல் ஆரோக்கியம் மற்றும் அவளது கர்ப்பப்பையின் நிலை போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும். 

பெரும்பாலான பெண்கள் இதை ஒரு தொல்லையாகவே பார்க்கிறார்கள், அதிலும் குறிப்பாக இந்தியாவில் இதற்குச் சம்பிரதாயம் என்கிற பெயரில் நிறையக் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பல பெண்களுக்கு இது மன ரீதியான உளைச்சலையும் தருகிறது. மேலும் வயிற்று வலி, இடுப்பு வலி, கை, கால் மற்றும் மார் வலிகளை இது தருவதால் அந்த 3 முதல் 6 நாட்கள் வரை பெண்கள் ஒரு வழியாகி விடுவார்கள். குறைந்தது 3 நாட்களுக்கு எப்போதும் உங்களது உடலில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருக்கிறது என்பது என்ன சாதாரண விஷயமா? இந்த மாதவிடாய் காலத்தில் நிலமையை இன்னமும் மோசமாக்காமல் இருக்க இந்த 3 விஷயங்களைச் செய்யாதீர்கள்.

1. உடலை வருத்தி வேலை செய்யாதீர்கள்:

இந்தக் காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சற்று தொய்வு அடைந்து இருப்பீர்கள், அதனால் உங்களது உடலை வருத்தி எந்தவொரு கடின வேலையைச் செய்தாலும் அது ரத்த போக்கை அதிகரித்து உங்களை மேலும் பலவீனமடைய செய்யும். அதனால் வேலையே செய்யாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று இல்லை, அதிக சிரமத்துடன் எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருப்பது நல்லது.

2. உணவை தவிர்க்கக் கூடாது:

மாதவிடாயின் போதும் சரியான நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும், வயிறு வலிக்கிறது, உடல் சோர்வாக இருக்கிறது என்பதற்காகச் சாப்பிடாமல் இருந்தால் அது நிலமையை மேலும் மோசமடைய தான் செய்யும். தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுவதன் மூலமே ரத்த போக்கினால் உங்கள் உடல் இழக்கும் சத்தினை உங்களால் திரும்பப் பெற முடியும். அதனால் உணவைப் புறக்கணிக்காதீர்கள்.

3. நாப்கீன்களை குறிப்பிட்ட இடைவெளியில் கட்டாயம் மாற்ற வேண்டும்:

மாதவிடாய் காலத்தின் போது நாப்கீன்களை உபயோகிப்பவர்கள் என்றால் நிச்சயம் 4 அல்லது 5 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கீன்களை மாற்றிவிட வேண்டும். வெளியேறும் ரத்தம் கிருமிகளை உருவாக்கும் என்பதால் நீண்ட நேரம் ஒரே நாப்கீனை வைத்திருப்பது நோய் தொற்றுகளை உருவாக்குவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. 

மாதவிடாய் என்பது ஒரு பெண் தாயாவதற்குத் தயாராக இருக்கிறாள் என்பதை உணர்த்தும் ஒரு புனிதமான நிகழ்வு, அதனால் அதை ஒரு சாபமாக கருதி வெறுக்காதீர்கள், சரியான பராமரிப்பு மற்றும் மனப் போக்குடன் இந்தக் காலகட்டத்தை மிகவும் எளிதாகக் கடந்து விடலாம்.







நன்றி Hindu

(Visited 10035 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =