இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் இருமடங்காக அதிகரிக்கும் அபாயம்!




diabetes-india-map-needles-1024x682

 

உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி உலக நாடுகளிலேயே இந்தியாவிலேயே அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் வயதானவர்களுக்கு மட்டும் மரபணு முதிர்ச்சியினால் வந்த இந்த நோய் இன்றைய நிலையில் சர்வ சாதாரணமாகச் சிறியவர், பெரியவர் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் தாக்கும் ஒரு முதன்மை நோயாக உருவெடுத்துள்ளது. 
 
அந்த அறிக்கையின்படி பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவும், அதைத் தொடர்ந்து வரிசையாகச் சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, ஜப்பான், பாக்கிஸ்தான், ரஷ்யா, பிரேசில், இத்தாலி மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உள்ளன. 2000-ம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 31.7 மில்லியன் ஆகும், இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் அப்படியே இரட்டிப்பாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 79.4 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் 2030-ம் ஆண்டில் பாதிக்கப்பட்டிருப்போம். 

இயற்கையாகவே உடலில் சுரக்க வேண்டிய இன்சுலின் உற்பத்தியாகாமல் போவதால் ரத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு குறைகிறது, இதுவே நீரிழிவு நோயாளியாக ஒருவரை மாற்றுகிறது. இந்த நிலை வெகு நாட்களுக்கு நீடித்தால் அது இதய நோயை உண்டாக்குகிறது. 

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறியுள்ளதாவது, சமமான உணவு பழக்கத்தின் மூலமே இதைக் கட்டுப்படுத்த முடியும், மேலும் இதனால் ஏற்படும் அபாயத்தில் இருந்து தப்பிக்க சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிகமான எடை நீரிழிவு நோய் வருவதற்கான ஒரு முக்கிய காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு பழக்கத்துடன் உடற்பயிற்சி செய்தால் உடல் பருமனை தவிர்க்கலாம். 

நவம்பர் 14-ம் தேதியான இன்று உலகம் முழுவதிலும் உலக நீரிழிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமானது மக்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் கூறுவதே. இந்தத் தினத்திலாவது நீரிழிவு நோய் பாதிப்பை விளையாட்டாகக் கருதாமல் அதே சமயம் உயிரைப் பரிக்கும் கொடிய நோயாகவும் கண்டு அஞ்சாமல் அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதைக் கண்டறியுங்கள். நீரிழிவு நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.







நன்றி Hindu

(Visited 10021 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =