அதிகளவில் சத்துகளை கொண்டுள்ள கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என முன்னோர்கள் காலத்தில் இருந்து கூறப்பட்டு வருகிறது. கீரைகளில் சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் ஏ, பி, சி என சத்துகள் அதிகம் உள்ளன. ரத்த சோகையினை குறைக்க, கண்பார்வையை அதிகரிக்க, ஒட்டுமொத்த உடல்நலனை மேம்படுத்த கீரைகள் பயன்படுகின்றன. கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அந்தவகையில், கீரைகளின் ராணி என்று சொல்லக்கூடிய பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம். ► பொன்னாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்பு, வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ► ‘கண்பார்வைக்கு’ என்று சொன்னாலே நினைவுக்கு வருவது பொன்னாங்கண்ணி கீரை. கண்பார்வை மட்டுமின்றி, கண்கள் சிவந்துபோதல், கண் எரிச்சல் உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட அனைத்து கோளாறுகளுக்கும் இந்த வகை கீரை ஒரு நல்ல தீர்வாக இருக்கும். சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா? ► மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்தும். ► இதயம் மற்றும் மூளையின் சிறந்த செயல்பாடுகளுக்கு உதவும். வாய் துர்நாற்றம் நீங்கும். ► குறிப்பாக பெண்கள் சருமம் பளபளப்பாக பொன்னாங்கண்ணி கீரையை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ளுங்கள். ► மேலும், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் பொன்னாங்கண்ணி கீரையை காய்ச்சி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சியடையும். ► பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நன்றி Dinamani என்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா?
மக்காச்சோளத்தில் அதிக கார்போஹைட்ரேட்இருப்பதால், இதுஜங்க் உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த ஏழு எளிய வழிகள்மூளை, நரம்பு மண்டலம்நன்கு செயல்பட உதவுகின்றது. இதிலுள்ளநார்ச்சத்து மூலம் நோய் ஏற்படாமல்தடுப்பதிலும், உணவுகள் நன்றாக ஜீரணம்ஆகவும் வழிவகை செய்கிறது. இரும்புச்சத்துநிறைந்த மக்காச்சோளம் இரத்தசோகை வராமல்தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. Healthy Soup
காலையில் எழுந்தவுடன்உடல் எடையை குறைப்பது எப்படி (உணவின் மூலமாகவே)அன்றைய நாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரும் நினைக்கக்கூடியதுதான். நன்றி Dinamani உணவருந்தும் முறை
கோப்புப்படம் குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுவோர் அதிகம். இதில் இருமலைக் குணப்படுத்த வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தலாம். இருமல் உள்ளவர்கள் முதலில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்து பொடி செய்து பால், தேன் கலந்து சாப்பிடலாம். பாலில் மிளகுத் தூள் அல்லது மஞ்சள் தூள் அல்லது இவை இரண்டையும் சேர்த்து குடித்துவர இருமல், தொண்டை வலி குணமாகும். கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம் மூன்று மிளகுடன் சிறிது வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து மென்று அதன் சாறை விழுங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இருமுறை இவ்வாறு செய்துவர இருமல் சரியாகும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேனை கலந்து குடித்துவர வறட்டு இருமல் குணமாகும். பாலுடன் கிராம்புப் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி சாப்பிடலாம். தேனுடன் இஞ்சிச்சாறு சேர்த்து அருந்தினால் இருமல், சளி நீங்கும். நன்றி Dinamani சாரப்பருப்பின் பயன்கள்
குளிர்காலமோ, வெயில் காலமோ எப்போதுமே சுடுநீரில் மட்டும்தான் குளிப்போம் என்று சொல்பவர்கள் ஏராளம். சுடு நீரில் குளிப்பதுதான் உடலுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஏராளமானோர். சளி, காய்ச்சலா, ஒரு சில சொட்டு யூகலிப்டஸ் எண்ணெய்யை சுடுநீரில் விட்டுக் குளித்தால், சளி பறந்து போகும் என்று சிகிச்சைகள்கூட சொல்வார்கள். ஆனால், நல்ல சூடான தண்ணீரில் குளிப்பது, உடலுக்குக் கெடுபயனையே விளைவிக்கும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சரி.. சுடு தண்ணீரில் குளிப்பது, உடலுக்கு எவ்வாறெல்லாம் தீங்கிழைக்கும் என்பது குறித்து வெளியான சில ஆய்வுகள் உங்களுக்காக.. இதையும் படிக்க.. மீண்டும் முதலிலிருந்தா? கரோனா அபாயப் பகுதியாக மாறும் மண்டலம் 1. குழந்தைப் பேறு சுமார் 30 நிமிடங்கள், தொடர்ந்து மிகச் சூடான தண்ணீரில் குளிப்பவர்களுக்கு குழந்தைப் பேறு தொடர்பான பிரச்னைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மருத்துவ இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. எனவே, குழந்தைப் பேறு பிரச்னையை எதிர்கொண்டிருப்பவர்கள், மிகச் சூடான தண்ணீரில் குளித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக்கியிருந்தால், அதனை கைவிட்டு, குளிர்ந்த நீரில் குளிக்கலாம். மிகச் சூடானா தண்ணீரை குளிக்கும் டப் முழுக்க நிரப்பிவிட்டு, அதில் பல மணி நேரம் செலவிடுவது நிச்சயம் உகந்ததல்ல என்கிறார்கள் நிபுணர்கள். 2. தோல் வறட்சிஉணவருந்தும் முறை பொதுவாக, குளிர்காலத்தில் நம்மை புத்துணர்ச்சிக்கு உள்ளாக்கும் என்று மிகவும் நம்பும் சூடான குளியல்தான், ஏற்கனவே பனியால் வறண்டு போன நமது தோலை மேலும் வறட்சிக்குள்ளாக்குகிறது. சூடான தண்ணீரை தோலின் மீது ஊற்றும்போது, அதிலிருக்கும் ஈரப்பதத்தையும் தண்ணீர் எடுத்துவிடுகிறது. ஒரு வேளை உங்கள் தோல், மிருதவானதாக இருந்தால், நிச்சயம் சுடுதண்ணீரில் குளிப்பதைத் தவிர்த்து விடலாம். இதனால் சில தோல் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். 3. முடி கொட்டும் மிகச் சூடான தண்ணீரை தலையில் ஊற்றி குளிக்கும்போது, அதனால் தோல் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு முடி உதிரும் பிரச்னை ஏற்படும். சிலருக்கு ஏற்கனவே அதிகமாக முடிகொட்டும் பிரச்னை இருக்கும். அதற்காக சில சிகிச்சைகளையும் செய்வார்கள். ஆனால், அப்போது தொடர்ந்து சுடு தண்ணீரில் குளித்துக் கொண்டே இருந்தால் முடி கொட்டும் பிரச்னை குறையாது. 4. பழக்கமாகிவிடலாம் தொடர்ந்து சுடு தண்ணீரில் குளிப்பதை ஒருவர் செய்து வரும்போது, அது அவர்களுக்கு பழக்கமாகி, விட்டால், எப்போதுமே சுடுநீரில்தான் குளிக்க விரும்புவார்கள். வேறு வழியில்லாத நிலையில் குளிர்ந்த நீரில் குளிக்கும் நிலை ஏற்பட்டால், அது ஒரு சங்கடத்தை அளிக்கலாம். எனவே, சுடு நீரில் குளிக்கும் பழக்கத்துக்கு சிலர் அடிமையாகிவிடக் கூடும். 5. வயதான தோற்றம்குளிர்ந்த நீரில் குளிப்பவர்களை விடவும், சூடான தண்ணீரில் குளிப்பவர்களின் தோல் மிக விரைவாகவே தளர்வடைந்துவிடும். பொதுவாக எல்லோருக்குமே நாம் மிக அழகாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். ஆனால், தொடர்ந்து அதுவும் மிகச் சூடான தண்ணீரில் குளிப்பவர்களின் தோல்வி மிக விரைவாக தளர்ந்து வயதான தோற்றத்தைக் கொடுக்கும் அபாயம் உள்ளது. நன்றி Dinamani பல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை..
சுவாசமண்டலப் பிரச்சனையை சரிசெய்யும் கீர் தே. பொருட்கள்: உடல் எடையைக் குறைக்கும் காளான்! இதர மருத்துவப் பயன்கள் என்னென்ன? புதினா இலை, தேங்காய் துருவல் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்தூள். செய்முறை: மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சிறிது தண்னீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு வடிகட்டவும். இப்பொழுது புதினா கீர் ரெடி. இது வயிற்று புண்களை ஆற்றி பசியை தூண்டுவதோடு மட்டுமல்லாமல் சுவாசமண்டல பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. பற்களை வலுவாக்கி வாய்துர்நாற்றத்தை போக்குகிறது. 'நான் இப்படி இல்லையே' என்று நினைப்பவரா?
மூலத்தை முடக்கிப்போட இத ட்ரை பண்ணுங்க… சேப்பங்கிழங்கை சிறிது புளிசேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூலம் நீங்கும். உணவருந்தும் முறை பிரண்டையை நெய்விட்டு வதக்கி அரைத்து பாக்கு அளவு காலை, மாலை சாப்பிட்டு வரமூலத்தால் உண்டாகும் வலி, இரத்தப்போக்கு சரியாகும். தேங்காயைப் பாலெடுத்து அதனுடன் சிறிது கற்கண்டு சேர்த்து நெய்யில் வதக்கியபெருங்காயப்பொடி சேர்த்து பருகி வர மூலத்தினால் உண்டாகும் எரிச்சல் வலி குறையும். கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்
காய்கறிகளில் சுரைக்காய்கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?மலிவாக கிடைக்கிறது என்பதால் பலரும் அதனை பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள். நன்றி Dinamani கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்கள்!
சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி ஊற்ற வேண்டும். இப்போது பற்களின் இடையில் படும்படி நன்கு கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் நுரைத்து உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும்போது கொப்பளித்துவிட வேண்டும். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால் வாயை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். ஆயில் புல்லிங் பொதுவாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை எழுந்தவுடன் இதனைச் செய்வது நலம். ‘ஆயில் புல்லிங்’ செய்வதனால் ஏற்படும் பலன்கள்: ஆயில் புல்லிங் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பற்கள், ஈறுகள் உறுதியாகும். பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்னைகளும் சரியாகிவிடும். நன்றாக பசி எடுக்கும். செரிமான பிரச்னைகள் வராதுஇளநீர் எப்போது அருந்த வேண்டும்? அமைதியான நல்ல உறக்கம் கிடைக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேற்றப்படும். வாய் துர்நாற்றம் இருக்காது. உடல் சூடு தணியும். ஒற்றை தலைவலி, சைனஸ், தைராய்டு, தோல் வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். சருமம் பொலிவு பெற்று முக அழகைக் கூட்டும். நன்றி Dinamani தலைவலி, சளி, இருமலைப் போக்க…
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நாள்தோறும் பள்ளிகள் சீராக இயங்கி வருகின்றன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளில் இறுதியாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என்பதால், அதற்கான பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை ஒரு இருக்கையில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது பள்ளிகள் முழுமையாக செயல்படத் தொடங்கியதால், அனைத்து இருக்கைகளும் முழுமையாக நிரம்பிவிடுகின்றன. இதற்கிடையே, பள்ளி மாணவர்கள் பலரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செல்லிடப்பேசி அல்லது கணினி வழியாகவே பாடங்களைக் கற்றுக் கொள்வது முதல் வீட்டுப் பாடங்களை எழுதுவது வரை அனைத்துக்கும் செல்லிடப்பேசிகளின் ஆதரவை நாடியே இருந்தனர். இதனால், அவர்களுக்கு பாடங்கள் நன்கு புரிந்து, ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது புரிந்ததோ இல்லையோ, செல்லிடப்பேசியில் இருக்கும் அனைத்து விளையாட்டு மற்றும் செயலிகள் முழுக்க அத்துப்படியானது. ஸூம் மீட்டிங்கில் பாடம் எடுக்கும் போது, வேறொரு செயலியில் மாணவர்கள் தங்களுக்குள் சேட்டிங்கில் ஈடுபடுவது, செல்லிடப்பேசி விளையாட்டுகளை விளையாடுவது என வகுப்பறை நேரத்தில் செய்யத் தேவையில்லாத அனைத்தையும் செய்து முடித்தனர்.இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும் இதன் பலனாக, மாணவர்கள் பலருக்கும் கண்பார்வை மங்கி, தலைவலி உள்ளிட்டப் பிரச்னைகளும் நேரிட்டன. பேரிடர் பொதுமுடக்கத்துக்குப் பின் பள்ளிக்கு வந்த பல மாணவர்கள் கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டுதான் வந்திருந்தனர். சிலர் அணியாமல் வந்ததால் அவர்களுக்கு கண் பிரச்னை இல்லை என்று கூறிவிட முடியாது. அவர்களுக்கு கண் பிரச்னை இருப்பது இன்னமும் அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது என்று வேண்டுமானால் சொல்லுமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. கண் பார்வை மங்கலாக போனதால், வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சில் அமரும் மாணவர்களுக்கு, ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப் போடும் பாடங்கள் எதுவுமே தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடைசி பெஞ்ச் மாணவர்கள் அனைவரும் ஒன்று முன்னால் இருக்கும் நண்பர்களுடன் இடத்தைப் பகிர்ந்து கொண்டோ அல்லது தரையில் அமர்ந்தோ படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், எப்போதும் ஆட்டமும் பாட்டமும் என களைகட்டும் கடைசி பெஞ்ச் இப்போதெல்லாம் உட்கார ஆள் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது. நன்றி Dinamani சர்க்கரை நோய்க்கு…
எந்தவித ரசாயனமும் கலக்காத அன்று முதல் இன்றுவரை ஓர் இயற்கை உணவாக இருப்பது இளநீர். பானங்களில் இயற்கை அளித்த ஒரு பெரும்கொடை இளநீர் என்று கூறலாம். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும் வல்லமை இளநீருக்கு உண்டு. வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிப்பதில் முதல் பொருளாக இருக்கிறது. இளநீரில் வைட்டமின் ஏ,சி,கே உள்ளிட்ட சத்துகளும் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்களும் உள்ளன. இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ► உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். கெட்ட கொழுப்புகளை கரைக்கும். ► ரத்தம் சுத்தமடையும். ► வயிற்றுக்கோளாறுகளின் போது செரிமானப் பிரச்னைகளின்போது இளநீர் அருந்தினால் சரியாகும். ► அல்சர் நோயாளிகள் தினமும் இளநீர் சாப்பிடலாம். ► மலச்சிக்கல், வயிற்றுப்புண், நீர்க்கடுப்பு உள்ளிட்டவற்றுக்கு இளநீர் அருந்துங்கள். ► சிறுநீரகம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து இளநீர்தான். ► கோடை காலத்தில் உடல் சூட்டினைத் தணிக்க, உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களுக்கு அதிகமாக இளநீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா? ► சருமத்தின் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். சருமம் பொலிவு பெறும். ► உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இளநீர் அருந்தலாம். ► எலும்புகள் வலுவடையும். இளநீர் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் ஆஸ்துமா, சளி, சைனஸ், தொண்டைப் பிரச்னை உள்ளவர்கள் மேலும் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இளநீர் அருந்தலாம். இளநீர் எப்போது அருந்த வேண்டும்? இளநீரில் சுண்ணாம்புச் சத்து இருப்பதால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் இளநீரில் உள்ள சத்துகள் முழுமையாக உடலுக்கு சென்றுசேர வேண்டும் என்றால், காலையில் வெறும் வயிற்றில்தான் இளநீர் குடிக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நலம். அது இல்லாது, சாப்பாட்டுக்கு முன் இளநீர் அருந்துவது நல்லது. நன்றி Dinamani கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?
வெண்ணையாகிய நான் உருவாகும் கதை எல்லோருக்கும் தெரியும். என்னை உருவாக்கிய பழங்கால மனிதர்கள் என் அருமையை புரிந்து சாப்பிட்டு வந்தார்கள்.தற்போது உள்ள காலத்தில், நான் ஒரு கொடிய அரக்கன் என்றும், என்னை உட்கொண்டால் மாரடைப்பு வந்துவிடும், உடற்பருமன் தொப்பை கூடிவிடும் என்று கொலஸ்ட்ராலை அதிகமாக்கி விடுவேன் என்று என் மீது தவறான கருத்துக்கள் உருவாக்கியும் என்னை பலர் உதறி தள்ளிவிட்டனர். ஆனால், நான் ஒரு போராளி. மனிதர்களுக்கு நன்மை பெருக்கவே நான் உருவாகிறேன். நான் அவர்களுக்குள் சென்று அவர்களுடைய உடலுறுப்புகளை பாதுகாக்க போரிடுகிறேன்.நான் இயற்கையாக பசுவின் பாலிலிருந்து வெண்ணையாக பிரிக்கப்படுகிறேன். என்னிடம் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘டி’, வைட்டமின் ‘இ’, துத்தகம், செலினியம், குரோமியம், அயோடின் இருக்கிறது.என்னை உட்கொள்வதால் கண்நோய்கள், உடல் சூடு, கண் எரிச்சல், கண்களில் பீளை சாடுதல் போன்றவற்றை குணப்படுத்துகிறேன். 100 கிராம் உட்கொள்வதால் மனிதர்களாகிய உங்களுக்கு 21 கிராம் மோனோ அன் சாச்சுரேட், 3 கிராம் பாலி அன் சாச்சுரேட், 51 கிராம் சாச்சுரேட்டர் கொழுப்பு மற்றும் ஒமேகா- 3, ஒமேகா- 6, பேட்டி ஆசிட் உங்களுக்கு தருகிறேன்.இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் மூலம் ரத்த நாளங்களைப் பலப்படுத்துகிறேன்.கால்சியத்தை அதிகளவில் கொடுக்கின்றேன். பற்சிதைவைத் தடுக்கிறேன். பூரிதக் கொழுப்பு, புற்று நோயை குணப்படுத்தும் மற்றும் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளேன். தேவையான தாது உப்புகளை உடம்பு கிரகித்துக்கொள்ள உதவுகிறேன்.மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மை பயக்கிறேன். மேலும் என்னிடம் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இருதயத்திற்கு மிகவும் சிறந்தவையாகும்.முட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக பால் அருந்தியே ஆக வேண்டுமா? வைட்டமின்கள் எலும்பு வலுப்பெறுவதற்கு சிறந்ததாம். வைட்டமின் கே 2 வை தரும்போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் கொழுப்பு படிவதை தடுக்கிறது. நான் உடறபருமன் குறையவும் உதவுகிறேன்.என்னை உட்கொள்வதின் மூலம், உடல் மெருகேறும் பசி தூண்டுதலையும், தோலின் நிறத்தை கோதுமை போல் பழபழவென்றும், மற்றும் மலச்சிக்கலையும் போக்கி விடுகிறேன். என்னை மஞ்சள் பொடியோடு சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால், தோல் சுருக்கத்தை நீக்குகிறேன். முகம் பொலிவை தருகிறேன்.இன்னும் என்னை பற்றி ஏதாவது விசயங்கள் தெரிந்தால், மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். என்னை எவ்வளவு ஒதுக்கினாலும் நான் மக்களுக்கு எப்போதும் நன்மையாகவே இருப்பேன்..!! தொண்டை உறுத்தலா?
கற்பூரவல்லி மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இயற்கையான செடி. இலைகள் மிகவும் மென்மையாக பச்சை நிறத்தில் இருக்கும். காரத்தன்மையுடன் நீர்ச்சத்து கொண்டது. இதனை பச்சையாகவே சாப்பிடுவது நல்லது என்றாலும் சிலருக்கு காரத்தன்மை ஒப்புக்கொள்வது தேநீரில் போட்டு அருந்தலாம் அல்லது கஷாயம் செய்து குடிக்கலாம். கிராமங்களில்கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மார்புச்சளி, இருமல் மற்றும் காய்ச்சல் வரும்போது இதனைப் பயன்படுத்துவர். ♦ சளி மற்றும் இருமலைப் போக்க பெரிதும் உதவுகிறது. ♦ நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஆஸ்துமாவுக்கும் இயற்கையான சிகிச்சைப் பொருளாக பயன்படுகிறது. ♦ செரிமானத்திற்கு உதவுகிறது. சிலர் உணவுகளில் கூட பயன்படுத்துகின்றனர். ♦ எந்தவொரு சூழ்நிலையிலும் எளிதாக வளரக்கூடிய தாவரம் என்பதால் வீட்டில் வளர்க்கலாம். குறிப்பாக மழைக்காலங்களில் வேகமாக படர்ந்து வளரும்.உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க ♦ விஷக் கிருமிகளை முறிக்கும் தன்மை கொண்டதாலேயே முன்னோர்கள் வீட்டில் முன் துளசி, கற்பூரவல்லி செடியை வளர்ப்பதுண்டு. கற்பூரவல்லி இலைகளை காயவைத்துப் பொடி செய்தும் பயன்படுத்தலாம். ♦ கற்பூரவல்லியில் சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம் ஆகிய சத்துகள் இருக்கின்றன. நன்றி Dinamani Healthy Soup
கோப்புப்படம் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள் பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும் பல்வேறு ஆய்வுகளின் மூலமாகவும் இது உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் ரீதியான விளைவுகளை பட்டியலிடுகிறது. பொரித்த உணவுகள், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம், வாரத்திற்கு ஒவ்வொரு 114 கிராம் கூடுதல் பொரித்த உணவுகளுக்கும் ஆபத்து அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆயில் மசாஜ் ஏன் செய்ய வேண்டும்? சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில், பொரித்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதோடு இறப்புக்கான வாய்ப்பும் இருப்பதாகக் கூறுகின்றனர். இது 28% முக்கிய இதய நிகழ்வுகளின் அபாயத்துடன் தொடர்புடையது. கரோனரி இதய நோய்க்கான ஆபத்து 22% மற்றும்இதய செயலிழப்புக்கான ஆபத்து 7% ஆகவும் உள்ளது. பொரித்த உணவுகளில் மீன், உருளைக்கிழங்கு, ஸ்நாக்ஸ் ஆகியவை அதிகம் விளைவை ஏற்படுத்தும் என்றும் இவற்றை உணவில் குறைந்துகொண்டாலே பாதிப்பு குறையும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதய நோய்களால் உயிரிழந்தோருக்கு பொரித்த உணவுகளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம், அதேநேரத்தில் இதுகுறித்த கூடுதல் ஆய்வுகள் தேவை என்கின்றனர் ஆய்வாளர்கள். பொரித்த உணவுகளில் கொழுப்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. அவற்றை சமைக்கப் பயன்படும் ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்களிலிருந்து தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ்-கொழுப்பு அமிலங்களை உருவாக்குகின்றன. இதன் விளைவாக உடலில் அழற்சி ஏற்படுகிறது. பொரித்த கோழி மற்றும் பிரஞ்ச் பிரைஸ் போன்ற உணவுகளில் உப்பு அதிகம் இருக்கும் என்பதால் இது இதய நோய்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் இதனால் உணவில் முடிந்தவரை பொரித்த உணவுகளைத் தவிருங்கள் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். நன்றி Dinamani புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
‘சத்தான உணவே ஆரோக்கியமான வாழ்விற்கு ஆதாரம்‘ . இந்தியாவில் மட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதுமே பெரும்பாலான மக்கள் அதிகம் கவலை கொள்ளும் ஒரு பிரச்சனை அதீத உடல் பருமன். படிக்காத பாமர மக்களில் ஒரு பகுதியினர் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் மூட்டை தூக்கியோ அல்லது போக்குவரத்து துறையில் பொதுமக்களுக்காக சுமைதூக்கும் தொழில் செய்தோ வருகின்றனர் .ஆனால், நல்ல வசதியோடு விரும்பியதையெல்லாம் வாங்கி உண்ணும் ஆற்றல் படைத்த பல மனிதர்கள் தேவையற்ற உணவை மிகுதியாய் உண்டு பின்னர், உடலில் கொழுப்பு அதிகரித்து தங்களின் உடல் எடையையே தங்களால் சுமக்க முடியாத சூழலில் உள்ளனர். ஆரோக்கியத்திற்கு உகந்த உணவு எது ?தீங்கு விளைவிக்கும் உணவு எது ? என்று உண்பதற்கு முன்பே நன்கு தெரிந்தாலும் கூட , நாக்கு ஆசைப்படும் ஒரே காரணத்திற்காக நாம் நாக்கை விட அதிகமாகவே வளைந்து கொடுக்கிறோம். ஆனால், அல்லல் படுவதோ கடைசியில் வயிறு தான். ‘யாகாவாராயினும் நாகாக்க‘ என்று வள்ளுவர் கூறியது நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளை மட்டும் தான் என்று நான் எண்ணவில்லை அது நாக்கு விரும்பியதை எல்லாம் உண்ணக்கூடாது என்று கூறும் அறிவுரையாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாம் உண்ணும் உணவு தான் நம் உடம்பில் வரும் பல நோய்களுக்கு முதற்கண் காரணமாக உள்ளது. பொதுவாக நமக்கு நோய் ஏற்பட்டால் அதனை தீர்க்க நாம் சாப்பிடுவது மருந்து. திருவள்ளுவரும் ‘மருந்து‘ என்ற அதிகாரத்தில் ஏழு குறட்பாக்களில் உணவைப் பற்றியும் அதனை நாம் உண்ண வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் கூறியுள்ளார். நான் இதுபற்றி மேலும் நீட்டி முழக்காமல் நேரடியாக விடயத்திற்கு வருகிறேன் .நாம் இன்றைய உலகமயமாக்கலின் பல வசதிகளை அனுபவித்து வரும் காலகட்டத்தில் ,நமது நாட்டின் தட்ப வெப்பத்திற்கும் நமது உணவு கலாச்சாரத்திற்கும் பொருந்தாத பல உணவுகளை விரும்பியோ விரும்பாமலோ உண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மாறாக, இயல்பாகவே மனித சமூகத்தின் அன்றாட செயல்களில் இன்றியமையாததாக இருக்க வேண்டிய உடற்பயிற்சியை நம்மில் முக்கால்வாசி பேர் வாரம் ஒரு முறை கூட செய்வதில்லை. நாம் ஏன் தினசரி உடற்பயிற்சி செய்ய பழக்கப்பட வில்லை என்ற ஆராய்ச்சிக்குள் நாம் நுழைந்தோமானால் அது தனி ஒரு தலைப்பில் விவாதிக்கப்பட வேண்டியது. நான் இப்போது உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்த போவது இல்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நாம் உண்ணும் உணவின் மூலமாகவே எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை மட்டும் பார்க்கலாம். உடல் பருமனை குறைப்பதில் இரண்டு விதங்கள் உண்டு. ஒன்று , நாம் உண்ணும் உணவின் அளவை குறைப்பது. மற்றொன்று ,உணவில் கலோரிகள் குறைவாக உள்ள உணவினை உண்பது. நமது உடம்பிற்கு அனைத்து விதமான சத்துகளும் தேவை என்பதால் நமது உணவில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, தாது,வைட்டமின்கள் போன்ற அனைத்து சத்துக்களும் அன்றாடம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். ஒரு சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 2,000 கலோரிகள் எரிசக்தி தேவைப்படுகிறது ,எடுத்துக்காட்டாக நாம்…
பெரும்பாலும் நமது உடலில் ஏற்படும் குறைபாடுகளை, நமது உடல் வாய் விட்டுச் சொல்லாவிட்டாலும், பல்வேறு அறிகுறிகளைக் கொடுத்து நமக்கு உணர்த்த முற்படும். ஆனால், நாம்தான் அதைப் புரிந்து கொள்ளாமல், உடல் நலம் கெட்டு மோசமான பிறகு, அய்யோ அறிகுறி இருந்தும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று புலம்புவோம். முதலில் பெரிய பெரிய நோய்களை விட்டுத் தள்ளுங்கள். உடலில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை அது சொல்லும் அறிகுறிகளை காது கொடுத்துக் கேளுங்கள். நாம் உண்ணும் உணவில் போதுமான சத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். அது குறையும் போது உடலுக்குத் தேவையான சத்துக் கிடைக்காமல் போகும்போது அதனால் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். குறிப்பாக, உடலில் விட்டமின் டி சத்து குறைவதைப் பற்றி இங்கேப் பார்க்கலாம். இருப்பதிலேயே இலவசமாகக் கிடைக்கும் சத்து என்றால் அது விட்டமின் டி தான். நாள்தோறும் காலையில் சூரிய வெளிச்சத்தில் வந்து சிறிது நேரம் நின்றாலே போதுமானது. உடல் தனக்குத் தேவையான விட்டமின் டி சத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால், தற்போது மாறி வரும் சூழ்நிலையில், காலையில் கண் விழிப்பதே அபூர்வமாக மாறிவிட்டது. பிறகு எப்படி காலையில் சூரியனை தரிசிப்பது என்கிறீர்களா? அங்கு தான் தொடங்கியது சிக்கலே. ஆன்லைன் வகுப்புகள், வீட்டிலிருந்தே வேலை போன்றவற்றால், சிறியவர்கள் முதல் பெரியோர் வரை வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தேவையில்லாமல் போய்விட்டது. பல வீடுகளில் சூரிய ஒளி படுவதற்கான வாய்ப்பும் இல்லை. பிறகெப்படி கிடைக்கும் விட்டமின்படி.வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த மூச்சுப் பயிற்சி டிப்ஸ் உங்களுக்குத்தான் அது குறையத்தான் செய்யும். அதற்கான அறிகுறிகளைக் கொடுக்கத்தான் செய்யும். அதையாவது நாம் புரிந்து கொண்டு, உடனடியாக உடலுக்கு விட்டமின் டி கிடைக்கத் தேவையானவற்றை செய்ய வேண்டும். விட்டமின் டி என்ன செய்கிறது?உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்ள விட்டமின் டி உதவுகிறது. இதுதான் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கவும், பல்வேறு தொற்றுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நோய் வந்தாலும் அதனை குணப்படுத்தவும், உடலில் எலும்பு மற்றும் பற்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது. அறிகுறிகள் என்னென்ன? விட்டமின் டி குறையும் போது ஏற்படும் அறிகுறிகள் என்னவென்று பார்த்தால், அது குறிப்பாக இரண்டுதான் என்கிறார்கள். எந்த சத்துக் குறைந்தாலும் ஏற்படுவதுதான் இது. உடல் சோர்வு மற்றும் உடல் அசதி. இதனால், அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் போகிறது. தசைகளில் ஏற்படும் சோர்வு, நடக்க முடியாமல் போவது, படிகளில் ஏற முடியாமல் தவிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும். விட்டமின் டி குறையும் போது, எலும்புகள் பலவீனமடைகிறது. குழந்தைகளுக்கு எலும்புகள் மிருதுவாக மாறுகின்றன. பற்களில் ரத்தக் கசிவு போன்றவையும் கூட இதனால் ஏற்படலாம். ரத்தப் பரிசோதனை மூலமாக உடலில் விட்டமின் டி குறைபாட்டைக் கண்டறியலாம். விட்டமின் டி குறைந்தாலும் குறையாவிட்டாலும் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், வெளியில் செல்ல தேவையே இல்லாதவர்கள், தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் நிற்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இலவசமாகக் கிடைப்பதை…
ஆரோக்கியமான உடல்நலத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டியவை கீரைகள். வெறுமனே கீரைகளில் அதிகளவிலான சத்துகள் உள்ளன என்று கூறாமல் எந்தெந்த கீரைகளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வைட்டமின் “பி’ உள்ள கீரைகள்: பசலைக் கீரை, வெந்தயக் கீரை, கறிவேப்பிலை, புதினாக்கீரை, கொத்துமல்லிக் கீரை வைட்டமின் “ஏ’ உள்ள கீரைகள்: முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கொத்துமல்லிக் கீரை, பசலைக் கீரை, கறிவேப்பிலை, முளைக் கீரை, வெந்தயக் கீரை என்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா? இரும்புச் சத்து அதிகம் உள்ள கீரைகள்: பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக் கீரை, புதினாக் கீரை, முருங்கைக்கீரை. சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ள கீரைகள்: முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக் கீரை, புதினாக் கீரை, முளைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை இவற்றில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ளது. நன்றி Dinamani நெஞ்சு சளிக்கு நிவாரணம்
பேரீச்சம்பழம் மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உலர் பழங்களில் அனைத்து வகை சத்துகளையும் கொண்டது பேரீச்சம்பழம். இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டின், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மாங்கனீசு, இரும்புச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை(அல்லது 100 கிராம்) சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ► பேரீச்சம்பழம் மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ► குடல் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது. ► உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ► பேரீச்சையில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் இது கண் பார்வைக்கும் அவசியமானது. ► ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்து சரியான அளவில் இருக்க வழிவகை செய்யும். சுவாசமண்டலப் பிரச்சனையா ► கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவு. கருப்பையில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்கிறது. ► குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை பகுதிகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வழி செய்கிறது. ► எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ► சருமம் பொலிவடைய உதவுகிறது. ► உடல் எடை குறைய டயட்டில் இருப்பவர்கள் உலர் பழங்களில் கண்டிப்பாக பேரீச்சையை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதையும் படிக்க | 11 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது சரியா? நன்றி Dinamani உணவருந்தும் முறை
ஒருவரை பார்த்ததுமேநாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை சாப்பிடுங்கள்!அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும். நன்றி Dinamani நெஞ்சு சளிக்கு நிவாரணம்
காளான் ரத்தத்தில்உடல் பருமன் கொண்டவர்களுக்கு… குறைந்த கலோரி உணவுகள்!கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.மேலும், நுண்ணுயிரிகளை எதிர்த்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் வராமல் காக்கிறது. புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காளான் சாப்பிட்டு வந்தபோது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் ஒருமுறை சிறிதளவு காளான் உணவை சாப்பிடுவது நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்லஉடல் பலத்தை அளிக்கும். இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்