இந்திய கடற்படையில் காலியாக உள்ள எஸ்எஸ்சி அதிகாரி, ஹைட்ரோ கிராஃபி போன்ற தனித்துவமான பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத பொறியியல் பட்டதாரி ஆண் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள் : 50
பணி : ssc General Service ( GS/X ) – 47
பணி : Hydro Cadre- 03
தகுதி : பொறியியல் துறையில் ஏதாவது ஒரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
வயதுவரம்பு : விண்ணப்பதாரர் 02.01.1997 முதல் 01.07.2001க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.44,900 முதல் 1,42,400 வரை
விண்ணப்பிக்கும் முறை :
http://www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இரண்டு தனித்துவமான பணியிடங்களில் ஒன்றுக்கு தேர்வு செய்யப்படுவர்.