இந்து சமய அறநிலையத்துறை
தென்காசி மாவட்டம் மற்றும் வட்டம், குற்றாலம் கிராமம், அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலுக்கு கீழ்க்கண்ட பணியிடங்களில் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்
- கட்டட மேற்பார்வையாளர்
- மின் பணியாளர்
- சுகாதாரப் பணியாளர்
- கட்டட மேற்பார்வையாளர்
- இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
- நீதிமன்றத்தால் தண்டனை அடைந்தவர்கள், பணியிலிருந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள்.
- திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவராவர்.
- விண்ணப்பதாரர்கள் கல்வி, வயது, இனம், மதம், நன்னடத்தைச் சான்று, குற்ற வழக்குகளில் தொடர்பின்மை குறித்து பிய காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட சான்றிதழின் அசல் மற்றும் இதர தகுதிகளுக்கான
சான்றொப்பம் பெறப்பட்ட சான்று நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். - விண்ணப்பதாரர் தொழு நோயால் பாதிக்கப்படாதவராகவும், அருவருக்கத்தக்க நோய்களால் பிடிக்கப்படாதவராகவும் இருந்தல் வேண்டும்.
- விண்ணப்பத்துடன் ரூ.5-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட அலுவலக உறை இணைத்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்கள் சரிப்பார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வுக்கான அறிவிப்பு அனுப்பப்படும்.)
- நேர்முக தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.
- நேர்முக தேர்வுக்கு தேர்ந்தெடுக்கும் நபரை எவ்வித காரணங்களும் கூறாது நிராகரிக்கவும் திருக்கோயில் நிர்வாகத்திற்கு பிமை உண்டு
- பணி நியமனம் இந்து அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டது.
- இப்பணியிடத்திற்கு ஏற்கனவே விண்ணப்பம் அனுப்பப்பட்டிருந்தாலும், இவ்விளம்பரத்திற்கு பின்னர் கடைசி தேதிக்குள்ளும் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
- திருக்கோயில் மூலம் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படும் விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு 105.06.2021-5 தேதிக்குள் திருக்கோயில் அலுவலகத்திற்கு, அலுவலக நேரப்படி மாலை 5.45 மணிக்குள் வந்து
சேர வேண்டும். - இதர விவரங்கள் அலுவலக நாட்களில், அலுவலக வேலை நேரத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
- தெய்விகத்தாலும், ராஜகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
உதவி ஆணையர்/ செயல் அலுவலர்
அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில்,
குற்றாலம் 627 802. தென்காசி மாவட்டம்,
(Visited 100128 times, 31 visits today)