ஒரு அதிகாரியாக உள்நாட்டு பாதுகாப்பு படையில் சேருங்கள்

உள்நாட்டு பாதுகாப்பு படை அதிகாரிகளாக (துறைசாரா) நாட்டுக்கு சேவையாற்ற ஆதாய வேலைவாய்ப்பு பெற்ற இளம் ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதி நிபந்தனைகள்

  • நாட்டினம்: இந்திய குடிமக்கள் (ஆண் மற்றும் பெண்) மட்டும்
  • வயது வரம்பு: விண்ணப்பம் தாக்கல் செய்யும் கடைசி நாளில் அதாவது
    19 ஆகஸ்ட் 2021 அன்று 18 முதல் 42 வயது
  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம்,
  • உடல் தரநிர்ணயங்கள்: விண்ணப்பதாரர் கட்டாயம் அனைத்து
    வகையிலும் உடல் மற்றும் மருத்துவரீதி தகுதியடைந்திருக்க வேண்டும்.
  • வேலைவாய்ப்பு: ஆதாய வேலைவாய்ப்பு பெற்றவர்.
  • எழுத்துத் தேர்வு நாள்: 26 செப்டம்பர் 2021.
  • விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.jointerritorialarmy.gov.in இணையதளத்தை பயன்படுத்தி இயங்குதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பம் சமர்ப்பிக்க பிற முறையும் அனுமதிக்கப்படாது.
  • விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல்: இயங்குதள பதிவு மற்றும் விண்ணப்பங்கள் 20 ஜூலை முதல் 19 ஆகஸ்ட் 2021 அன்று இரவு 11.59 மணி வரை தாக்கல் செய்யப்படலாம் அதன்பிறகு இணைப்பு கிடைக்கப்பெறாது.அறிவுறுத்தல்கள் www.jointeritorialarmy.gov.in இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.
  • கட்டண விவரங்கள்: விண்ணப்பதாரர்கள் (200/- (ரூபாய் இருநூறு மட்டும்) கட்டணம் செலுத்த வேண்டும். விவரங்கள் www.jointeritorialarmy.gov.in இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.

    விண்ணப்பதாரர்கள் www.jointerritorialarmy.gov.in இணையதளத்தில்
    மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க பிற எந்த
    முறையும் அனுமதிக்கப்படாது.
(Visited 10049 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 11 =