தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி ஆலை முகவராக நியமனம் செய்ய விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி
ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலைகள்,அரைவை முகவராக உள்ள தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.


திருவள்ளூர் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரைவை செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்க ஏதுவாக நெல் சுத்தம் செய்யும் இயந்திரம், இயந்திர உலர்த்தி, நவீன அவியல் முறை, கோண் பாலிசர், ஓயிட்னஸ் கருப்பு அரிசி நீக்கும் இயந்திரம், சேமிப்புக் கிடங்கு வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட தனியார் அரைவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரைவை முகவராக நியமனம் செய்ய விண்ணப்பிக்கலாம்.


இதை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.


மேலும், கூடுதல் விவரங்களுக்கு, மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவள்ளூர் மண்டலம் எண்.46, வள்ளலார் தெரு, பெரியகுப்பம், திருவள்ளூர் என்ற முகவரியிலும், 9444662984, 044-27662417, 044-27664016 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

(Visited 10056 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =