சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கு முற்றிலும் தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்டையில் ஒரு உளவியலாளர், ஆற்றுப்படுத்துனர் மற்றும் ஒரு காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
உளவியலாளர், ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு இளங்கலை (ஹானர்ஸ்) அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காவலர் பதவிக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்கவேண்டும்.
இப்பதவிக்களுக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையதளத்தில் (https://vellore/nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 18ம் தேதி மாலைக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
அண்ணாசாலை, வேலூர்-1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.