மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு இரவுக் காவலர் பணியிடத்தில் சேரத் தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒரு இரவுக் காவலர் பணியிடத்தை நிரப்பிட இனச்சுழற்சி முறையில் பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் (முன்னுரிமை அல்லாதது) தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்த மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சியின்மையாக இருத்தல் வேண்டும்.

2021 ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் 35 வயதின் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்கள் மட்டும் தங்களது கல்வித்தகுதி, ஜாதிச் சான்று, வயது குறித்த சான்று மற்றும் வேலைவாய்ப்பு பதிவு குறித்த அனைத்து ஆவணங்களின் நகலுடன் செப். 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை, தருமபுரி
மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அலுவலக வேலை நாள்களில் கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
விவரங்களுக்கு, 04342 297844 என்ற தொலைபேசிஎண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;