இந்த ராசி பெண்களுக்கு மனதிற்கினிய செய்திகள் தேடி வரும்: வார ராசிபலன்




பிப்ரவரி 18 முதல் 24ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள்.

மேஷம்
(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

புதிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் நேரமிது.  எதிரிகளின் மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கங்கள் அகலும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும். வியாபாரிகள் புதிய முதலீட்டுக்கான முயற்சிகளை மறு பரிசீலனை செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சற்று சிரமத்துக்கு உரியதாக இருக்கும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் விளைச்சல் அதிகரிக்கும். சந்தையில் தானிய விற்பனையில் லாபம் சற்று சுமாராகவே இருக்கும். 

அரசியல்வாதிகள் நெருங்கிய நண்பர்களின் மூலம் சில இடையூறுகளைச் சந்திப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதால் மனதில் திருப்தி ஏற்படும். சக கலைஞர்களின் விருப்பத்தை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பிரச்னைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். வருமானம் பெருகும். மாணவமணிகள் சக மாணவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழகவும். பெற்றோர் சொல் கேட்டு நடக்கவும்.

பரிகாரம்: பரிக்கல் ஸ்ரீநரசிம்மரை வழிபடவும். அனு
கூலமான தினங்கள்: 18, 19. சந்திராஷ்டமம்: 23, 24.

***

ரிஷபம்
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும் நேரமிது. உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். உழைப்பிற்குத் தகுந்த முழுமையான பலன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாக சமாளிக்கப் பழகிக் கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சாத்தியமாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். அவசியமான செலவுகளுக்கு கடன் வாங்க நேரிடும். விவசாயிகளுக்கு திருப்திகரமான மகசூல் லாபம் கிடைக்கும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விற்பனை செய்வீர்கள். கால்நடைகளால் நன்மை உண்டாகும். 

அரசியல்வாதிகள் செய்யும் மக்கள் நலத்திட்டங்களுக்கு மாற்றுக் கட்சியினரும் ஒத்துழைப்பு தருவார்கள். அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெயரும் புகழும் அதிகரிப்பதற்கான சாதனைகளைச் செய்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தினருடன் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கணவருடன் ஒற்றுமை ஓங்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 
பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 18, 20. சந்திராஷ்டமம்: இல்லை.
***
மிதுனம்
(மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

மந்தமாக நடந்த காரியங்கள் சுறுசுறுப்பாக நிறைவேறும் நேரமிது. பொருளாதார நிலையில் சீரான வளர்ச்சியைக் காண்பீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த மனக்குழப்பங்கள் அகல சற்று தாமதமாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ரகசியங்களை எவரிடமும் வெளியிடாதீர்கள். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளைப் பல இடங்களுக்கு அனுப்பி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்த வகையில் லாபம் காண்பீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி விளைச்சலைப் பெருக்கப் பாடுபடுவீர்கள். கால்நடைகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் இட்ட பணிகளை நிறைவேற்ற நேரம் ஒதுக்குவீர்கள். கடந்த கால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பொருளாதார நிலையில் மிகுந்த மாற்றத்தைக் காண்பீர்கள். பெண்மணிகள் உற்றார் உறவினர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கணவருடன் ஒற்றுமையோடு இருப்பீர்கள். மாணவமணிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

பரிகாரம்: ஸ்ரீராமரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 19, 20. சந்திராஷ்டமம்: இல்லை.

***
கடகம்
(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சியை காணும் நேரமிது. நண்பர்களைத் தேர்ந்தெடுத்து கவனமாகப் பழகுங்கள். எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்த நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் நட்பு பாராட்டுவீர்கள். மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். அகலக்கால் வைக்காமல் அவசியமான பொருள்களை மட்டும் கொள்முதல் செய்யவும். விவசாயிகள் தானிய உற்பத்தியில் நல்ல பலன் காண்பீர்கள். இதுவரை வராமல் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். சக கலைஞர்களுக்கும் வாய்ப்புகளைப் பெற்றுத் தருவீர்கள். பெண்மணிகள் கணவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மழலை வரவால் மகிழ்ச்சி ஏற்படும். மாணவமணிகள் ஞாபக சக்தி மேம்பட அதிகாலையில் எழுந்து படிக்கவும். உடல் நலம் பேண யோகா, பிராணாயாமம் செய்து வரவும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு விளக்கேற்றி வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 18, 20. சந்திராஷ்டமம்: இல்லை.

***

சிம்மம்
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றி பெறும் நேரமிது. சமுதாயத்தில் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுவார்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்கள் கடின வேலைகளையும் விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டும் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய வேண்டாம். படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகள் சிறு சிறு இடையூறுகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள். உழவுத் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்வீர்கள். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கட்டளைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். எவரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். உங்கள் திறமைக்கு ஏற்ற மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வருமானத்திற்கு ஒரு குறைவும் வராது. மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். படிப்பில் அதிக கவனத்துடன் ஈடுபட வேண்டிய நேரமிது. 

பரிகாரம்: பார்வதி, பரமேஸ்வரரை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 20, 21. சந்திராஷ்டமம்: இல்லை.

***
கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

நல்ல செய்திகள் வந்து சேரும் நேரமிது. புதிய முயற்சிகள் தொடர்பான ஒப்பந்தங்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கும். உடல் நலத்தில் சற்று கவனம் செலுத்தவும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் சில தொந்தரவுகளை அனுபவிப்பீர்கள். எதிர்பாராத இடமாற்றம் திக்குமுக்காடச் செய்யும். வியாபாரிகள் அனுபவமுள்ள கூட்டாளிகளைத் தேர்ந்தெடுத்துப் பழகுவீர்கள். கூட்டுத் தொழிலில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். விவசாயிகள் கால்நடைகளின் பராமரிப்புக்கு அதிக செலவு செய்வீர்கள். தானியங்களின் மூலம் லாபம் ஈட்டி பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். 
அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் இட்ட கட்டளைகளை தொண்டர்களின் உதவியோடு துரிதமாக நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் புதிய மாற்றங்களைச் சந்திப்பீர்கள். பழைய கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பெண்மணிகளுக்கு கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்கள் நன்மை தரும்.  மாணவமணிகள் திட்டமிட்டு ஒவ்வொரு காரியத்தையும் செயல்படுத்துவீர்கள். மனக் குழப்பங்கள் நீங்கி நினைத்த இலக்கை அடைவீர்கள்.

பரிகாரம்: மஹாவிஷ்ணு வழிபாடு உகந்தது. அனுகூலமான தினங்கள்: 19, 21. சந்திராஷ்டமம்: இல்லை.

***
துலாம்
(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
வெளியூர் பயணங்களை உற்சாகமாக மேற்கொள்ளும் நேரமிது. தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். ஸ்பெகுலேஷன் துறைகளில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். அவசரப்பட்டு எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவுடன் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். தைரியத்துடன் எதையும் சாதிக்கும் ஆற்றல் உருவாகும். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பழைய கடன்களை அடைக்க கடுமையாக உழைப்பீர்கள். விவசாயிகளுக்கு சந்தையில் போட்டி கடுமையாக நிலவும். புதுப் புது குத்தகைகளை எடுத்து அதிக மகசூல் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் பயணங்களுக்காக அதிக நேரத்தை செலவிடுவீர்கள். தொண்டர்களின் ஆதரவை பெருக்கிக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். சமூகத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும். பெண்மணிகளுக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் பேச்சுக்கள் ஆறுதல் அளிக்கும். மாணவமணிகள் பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களது முக்கியமான கோரிக்கைகள் இப்பொழுது நிறைவேறும். 

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 21, 22. சந்திராஷ்டமம்: இல்லை.
***
விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சுபச் செய்திகள் உங்களைத் தேடி வரும் நேரமிது. பொருளாதாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். அநாவசியச் செலவுகளைக் குறைப்பது நல்லது.  கஷ்டங்கள் தீரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சில தவறுகள் ஏற் வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகளில் சிறிது தாமதம் ஏற்படும். அகலக்கால் வைக்காமல் தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி வியாபாரத்தைப் பெருக்கவும். விவசாயிகள் சந்தையில் போட்டிகளைச் சமாளிக்க பாடுபடுவீர்கள். மகசூல் பெருகும். தானியங்கள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் கவனத்துடன் செயல்படவும். தொண்டர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பலவகையில் சிக்கனத்தைக் கையாண்டு சக கலைஞர்களுக்கும் உதவுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, அமைதி உருவாகும். பேச்சு சாதுர்யத்தால் அனைத்துப் பிரச்னைகளையும் சமாளிப்பீர்கள். மாணவமணிகள் சோம்பலை விட்டொழித்து அதிகாலையில் எழுந்து படிக்கவும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 20, 22. சந்திராஷ்டமம்: இல்லை.

***
தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு அனுசரணையாக செயல்படும் நேரமிது. உடலிலும், மனதிலும் ஏற்பட்ட சோர்வுகள் அகலும். மனதில் தவறான எண்ணங்களுக்கு இடம் தராமல் நேர்வழியில் பயணியுங்கள். 

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வார்கள். வேலை அனைத்தையும் குறித்த நேரத்தில் முடிக்க மிகவும் சிரமப்படுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சற்று கவனத்துடன் ஈடுபடவும். இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விவசாயிகள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் நஷ்டங்களைத்  தவிர்க்கலாம். கால்நடைகளால்  நல்ல லாபம் அடையலாம். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு கிடைக்கும். பல தடைகளையும் தாண்டி காரியங்களைச் சாதித்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் உழைப்பால் உயர்வு அடைவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய மதிப்பு கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மாணவமணிகள் விளையாட்டுத்துறையில் வெற்றி முத்திரை பதிப்பார்கள். வெளிநாடு சென்று கல்வி கற்கும் யோகமும் உருவாகும்.

பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 22, 23. சந்திராஷ்டமம்: இல்லை.
***
மகரம்
(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும் நேரமிது. பொருளாதார நிலையில் அபரிமிதமான முன்னேற்றங்களைக் காண்பீர்கள். நினைத்த காரியங்கள் வெற்றி பெற அதிகம் பாடுபடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவினால் வாழ்க்கைத் தரம் சற்று உயரும். அலுவலகப் பணியாளர்களுக்கு இடையில் சிறிது மனக்கசப்பு ஏற்படும். வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக அமையும். விவசாயிகளுக்கு பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகிவிடும். புதிய உபகரணங்களை வாங்கி மகசூலைப் பெருக்குவீர்கள். தானியங்களால் நல்ல லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அந்தஸ்தான பதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பெண்மணிகளுக்கு பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் சக மாணவர்களுடன் சேர்ந்து பொழுதைப் போக்குவதால் பெற்றோருக்கு மனவருத்தம் உண்டாகும். வருங்கால கனவை நனவாக்க சரியான வழியில் நேரத்தைச் செலவிடவும்.
பரிகாரம்: ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 19, 23. சந்திராஷ்டமம்: 18.

***

கும்பம்
(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொலைதூரத்திலிருந்து சுபச் செய்திகள் வரும் நேரமிது. கடினமான வேலைகளையும் திறமையாகக் கையாண்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். நண்பர்களை விரோதித்துக் கொள்ள வேண்டாம். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வீண் பெருமைகளைப் பேச வேண்டாம். 

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலைகளில் ஏற்படும் இடையூறுகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவினால் லாபம் உயரக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மகசூல் நன்றாக இருக்கும். 

அரசியல்வாதிகள் போட்டிகளைச் சந்திப்பீர்கள். கட்சியினருடன் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களால் சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்மணிகளுக்கு மனதிற்கினிய செய்திகள் தேடி வரும். மழலையின் வரவு மகிழ்ச்சியைத் தரும். தேவைக்கேற்ற பொருள் சேரும். மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். பெற்றோரும் ஆசிரியர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். முன்னேற்றமான சூழல் உருவாகும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 21, 24. சந்திராஷ்டமம்: 19, 20.

***
மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உருவாகும் நேரமிது. எவரிடமும் அதிகமான பேச்சு வார்த்தைகளை வைத்துக்கொள்ளாமல் அமைதி காப்பது நலம். வரவுக்கேற்ற வகையில் செலவுகள் செய்யவும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டி வரும். வியாபாரிகள் கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். பிரச்னைகளை ஏற்பட்டால் சமாளிக்கும் ஆற்றலும் தைரியமும் பெறுவீர்கள். விவசாயிகள் தானிய விற்பனையில் அமோக வளர்ச்சி காண்பீர்கள். குத்தகை செலவுகள் அதிகரித்தாலும் கால்நடைகளால் நல்ல லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். உட்கட்சி விவகாரங்களில் வீணாகத் தலையிட வேண்டாம். கலைத்துறையினர் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். சக கலைஞர்களின் உதவியால் மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்மணிகளுக்கு உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். கணவருடன் சுமூகமான உறவு நீடிக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். விளையாட்டுகளிலும் வெற்றி பெறுவீர்கள்.  

பரிகாரம்: குல தெய்வ வழிபாடு உகந்தது. அனுகூலமான தினங்கள்: 23, 24. சந்திராஷ்டமம்: 21, 22.
 







நன்றி Hindu

(Visited 10049 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =