தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் மே 21-ஆம் தேதி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நடைபெறவுள்ளது.
இத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வின் வெற்றிக்குப் பயன்படும் வகையில் குரூப் 2 முதல் நிலைத் தேர்வுக்கு ஐந்து மாதிரி வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்டுள்ளது. இந்த வினாத்தாள்கள் வாட்ஸ் ஆப் மூலம் இலவசமாக அனுப்பப்படும்.
இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற விரும்புவோர் தங்களது குரூப் 2, 2ஏ தேர்வுகளை எழுதுவதற்கான நுழைவுச் சீட்டு நகலை இணைத்து 99626 64441 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன்பதிவு செய்த அனைவருக்கும் 5 மாதிரி வினாத்தாள்கள் இ-புத்தகமாக பிடிஎஃப் வடிவில் அனுப்பப்படும்.
இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி, 142, ஜிஎஸ்டி சாலை,குரோம்பேட்டை, சென்னை-44′ என்ற முகவரியில் நேரிலோ 9962600037,99962600038 ஆகியகைப்பேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;