சென்னை: இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் காலியாக உள்ள 11 உதவி ஆராய்ச்சி அலுவலர், 9 ஆய்வக நுட்பர் பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் காலியாகவுள்ள 11 உதவி ஆராய்ச்சி அலுவலர் (பல்வேறு பிரிவுகள்) மற்றும் 9 ஆய்வக நுட்புநர் பணியிடங்களில் முறையே ரூ20 ஆயிரம் மற்றும் ரூ 12 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிகமாக பணியமர்த்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை http://www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை இணைப்பு வளாகத்திலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு முதன்மை ஆராய்ச்சி அலுவலர்/ இயக்குனருக்கு அரும்பாக்கம் சென்னை – 600106 என்ற முகவரிக்கு வருகிற 20ம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள், எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் முழுமையாக நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.