இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களுக்கு
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 20 பாதுகாவலர் பணியிடத்துக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்
கள் வரும் 15-ஆம் தேதிக்குள் www.iob.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன் பெறலாம். விண்ணப்பித்த விவரத்தை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416 2977432 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;