ஒன்றிய அரசின் நிறுவனத்தில் ஜூன




ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும்  கொல்கத்தாவிலுள்ள இந்திய ரசாயன உயிரியல் நிறுவனத்தில் ஜூனியர் செக்ரடேரியட் அசிஸ்டென்ட் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. Junior Secretariat Assistant (Gen): 8 இடங்கள் (பொது-6, எஸ்சி-1, ஓபிசி-1).
2. Junior Secretariat Assistant (S&P): 2 இடங்கள் (பொது)
3. Junior Secretariat Assistant (F&A): 3 இடங்கள் (பொது)

மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கும் வயது 28க்குள். சம்பளம்: ரூ.30,000.

தகுதி: பிளஸ்2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் வேகமாக டைப்பிங் செய்யும் திறன்.

4. Junior Stenographer: 4 இடங்கள் (பொது). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.38,000/-. தகுதி: பிளஸ்2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் தேர்ச்சி. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
 
https://iicb.res.in/ அல்லது http://www.career.iicb.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.8.2022.





நன்றி Amarujala

(Visited 10033 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =