இந்திய கடலோர காவல் படையில் 300 நேவிக், யான்ட்ரிக் பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Navik (General Duty): 225 இடங்கள் (பொது-87, ஓபிசி-48, எஸ்சி-35, எஸ்டி-32, பொருளாதார பிற்பட்டோர்-23). தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி.
2. Navik (Domestic Branch): 40 இடங்கள் (பொது-16, ஓபிசி-10, எஸ்சி-3, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர்-5). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
3. i) Yantrik (Mechanical): 16 இடங்கள் (பொது-5, ஓபிசி-7, எஸ்சி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). ii) Yantrik (Electrical): 10 இடங்கள் (பொது-3, ஓபிசி-3, எஸ்சி-3, எஸ்டி-1). iii) Yantrik (Electronics): 9 இடங்கள் (பொது-4, ஓபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1).
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடங்களில் 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகள் டிப்ளமோ அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடங்களில் 2 அல்லது 3 ஆண்டு டிப்ளமோ.
கட்டணம்: ரூ.250/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி.,எஸ்டியினருக்கு கட்டணம் கிடையாது. எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.09.2022.