இந்திய உணவு கழகத்தில் 108 மேனேஜ்மென்ட் டிரெய்னி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
1. Manager (General): 14 இடங்கள்.
2. Manager (Depot): 15 இடங்கள்.
3. Manager (Movement): 6 இடங்கள்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎஸ் படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Manager (Accounts): 35 இடங்கள்.
தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎஸ் பட்டம் அல்லது நிதி பாடத்தில் எம்பிஏ.
5. Manager: (Technical): 28 இடங்கள்.
தகுதி: பிஎஸ்சி வேளாண்மை/பிஎஸ்சி உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்/பி.இ., வேளாண்மை இன்ஜினியரிங்/ பி.இ., பயோ டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம்.
6. Manager: (Civil Engineering): 6 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,
7. Manager: (Electrical/Mechanical): 1 இடம்.
8. Manager: (Hindi): 3 இடங்கள். தகுதி: ஏதாவதொரு முதுநிலைப் பட்டம். இளநிலை மற்றும் முதுநிலை பட்டத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பில் 5 வருட பணி அனுபவம்.
அனைத்து பணிகளுக்கும் வயது: 28க்குள். சம்பளம்: ரூ.40,000- 1,40,000. கட்டணம்: ரூ.800/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. www.fci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.9.2022.