தமிழக அரசு நியாய விலைக்கடையில்




தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் அனைத்து மாவட்ட நியாய விலைக் கடைகளுக்கு 6,500க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிகளை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

பணி: நியாய விலைக்கடை விற்பனையாளர்

காலியிடங்கள்: 5578

தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை தொகுப்பூதியமாக மாதம் ரூ.6,250 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பின்னர் மாதம் ரூ.8,600 – 29,000 வழங்கப்படும்.

பணி:  உதவியாளர் 

காலியிடங்கள்: 925

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம்: நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை தொகுப்பூதியமாக மாதம் ரூ.5,500. ஓராண்டுக்குப் பின்னர் மாதம் ரூ.7,800 – 26,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.150, கட்டுநர்  பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.100 செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரர் சார்ந்துள்ள  வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் மாவட்ட வாரியான காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் வாரியான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

அரியலூர்

கடலூர்

சென்னை

கோவை

தர்மபுரி: 

திண்டுக்கல்: 

ஈரோடு: 

காஞ்சிபுரம்: 

கன்னியாகுமரி: 

கரூர்: 

கிருஷ்ணகிரி: 

மதுரை: 

நாகப்பட்டினம்: 

நாமக்கல்: 

நீலகிரி: 

பெரம்பலூர்: 

புதுக்கோட்டை: 

ராமநாதபுரம்: 

சிவகங்கை: 

சேலம்: 

தஞ்சாவூர்: 

தேனி: 

தூத்துக்குடி: 

திருச்சி: 

திருநெல்வேலி: 

திருப்பூர்: 

திருவள்ளூர்: 

திருவாரூர்: 

திருவண்ணாமலை: 

வேலூர்: 

விழுப்புரம்: 

விருதுநகர்: 







நன்றி Dinamani

(Visited 10018 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =