கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ண




job

தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுநர் பணியிடத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இந்த பணிக்கு 1.7.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில்லை. 

பி.எட் தகுதியுடன் பி.இ(கணினி அறிவியல்) அல்லது பி.எஸ்சி(கணினி அறிவியல்) அல்லது பிசிஏ அல்லது பி.எஸ்சி(தகவல் தொழில்நுட்பம்) ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். 

மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி, சீனிவாசா காலனி, சூரமங்கலம், சேலம் – 636005 என்ற முகவரியில் நவம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.







நன்றி Dinamani

(Visited 10020 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =