மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமா பால் படையில் காலியாக உள்ள 399 இடங்களுக்கு விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Constable General Duty (Under Sports quota)
மொத்த இடங்கள்: 399. சம்பளம்: ரூ.21,700-69,100.
வயது: 18 முதல் 23க்குள்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் விவரம்:
1. Archery: 16 (ஆண்கள்-6, பெண்கள்-10)
2. Athletics: 46 (ஆண்கள்-24, பெண்கள்-22)
3. Basket Ball: 7 (ஆண்கள்-3, பெண்கள்-4)
4. Body Building: 10 (ஆண்கள் மட்டும்)
5. Boxing: 17 (ஆண்கள்-11, பெண்கள்-6)
6. Cycling: 4 (ஆண்கள் மட்டும்)
7. Equestrian: 4 (ஆண்கள் மட்டும்)
8. Fencing: 14 (ஆண்கள்-9, பெண்கள்-5)
9. Foot ball: 17 (ஆண்கள்- 9, பெண்கள்-8)
10. Gymnastics: 7 (ஆண்கள்-2, பெண்கள்-5)
11. Hand ball: 11 (ஆண்கள்- 5, பெண்கள்-6)
12. Hockey: 8 (ஆண்கள்-4, பெண்கள்-4)
13. Judo: 14 (ஆண்கள்-7, பெண்கள்-7)
14. Kabadi: 14 (ஆண்கள்-7, பெண்கள்-7)
15. Karate: 11 (ஆண்கள்-3, பெண்கள்-8)
16. Shooting: 13 (ஆண்கள்-6, பெண்கள்-7)
17. Sepak Takraw: 15 (ஆண்கள்-7, பெண்கள்-8)
18. Swimming: 25 (ஆண்கள்-15, பெண்கள்-10)
19. Taek wondo: 17 (ஆண்கள்- 9, பெண்கள்-8)
20. Volley Ball: 12 (ஆண்கள்-6, பெண்கள்-6)
21. Weight Lifting: 17 (ஆண்கள்-6, பெண்கள்-11)
22. Wrestling (Free Style): 33 (ஆணகள்-21, பெண்கள்-12)
23. Wushu: 22 (ஆண்கள்-14, பெண்கள்-8)
24. Water Sports: 21 (ஆண்கள்-11, பெண்கள்-10).
25. Yatching: 24 (ஆண்கள்- 12, பெண்கள்-12).
விளையாட்டு தகுதிகள்: சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகள் ஏதாவது ஒன்றில் தேசிய/ மாநில/பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் ஜூனியர் அல்லது சீனியர் பிரிவு போட்டிகளில் பங்கு பெற்று விளையாடியிருக்க வேண்டும். அக்.31, 2022க்கு முந்தைய 2 வருடங்களில் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
ஆண்கள் குறைந்த பட்சம் 170 செ.மீ உயரமும், பெண்கள் குறைந்த பட்சம் 157 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். எஸ்டியினருக்கு 2.5 செ.மீ சலுகை தரப்படும். மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) சாதாரண நிலையில் 80 செ.மீ அகலமும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ அகலமும் இருக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ssbrectt.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.11.2022.