இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி ஈரோடு, நவ.15மத்திய அரசு கிராமப்புற அமைச்சகம் வழிகாட்டுதலின்படி, கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலை யம், தொழில் திறன் பயிற்சிகள் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வர்களுக்கு இலவசமாக அளித்து வருகிறது. அதன்படி தற் போது விவசாயம் சார்ந்த இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வருகிற 21-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 1-ந்தேதி வரை 10 நாட்கள் இலவசமாக நடைபெற உள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் ஆஸ்ரம்மெட்ரிக் உயர்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் 2-ம் தளத்தில் நடைபெறும் இந்த இலவச பயிற்சியில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சிபெற தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பயிற்சி தினந்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். மேலும் இலவச மதிய உணவு மற்றும் சீருடை வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்க ளுக்கு 0424 2400338 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கனரா வங்கி முதுநிலை மேலாளர் கே.கவுரி சங்கர் தெரிவித்துள்ளார்.

(Visited 10072 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =