தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு மாநில தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, விருப்பமுள்ள நபர்கள் தங்கள் விண்ணப்பம் மற்றும் தகுதி விவரங்களை, வரையறுக்கப்பட்ட படிவத்தில், 23 நவம்பர் 2022 அன்று மாலை 5 மணிக்குள், விரைவஞ்சல் அல்லது பதிவஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.
நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி (ஓய்வு), இரண்டாவது தளம், கத்தோலிக்க மையம், எண்.108, அரண்மனைக்காரன் தெரு, பாரிமுனை, சென்னை 600001.
மின்னஞ்சல் முகவரி: gmakbarali52@gmail.com விண்ணப்ப படிவம் மற்றும் பிற விவரங்களை www.tn.gov.in/department/22 என்ற இணையதளத்தில் “Announcements” என்ற தலைப்பின் கீழ் காண்க தலைவர், தேடுதல் குழு.