எஸ்.ஐ. பணிக்கு 438 பேர் தேர்வு: இணையதளத்தில் முடிவு வெளியீடு சென்னை, நவ. 18: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் 438 பேர் தேர்வு செய் யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம், அந்தத் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
காவல் துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் கள் (எஸ்.ஐ.) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் 25-ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக, இந்தத் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்தனர். 197 மையங்களில் நடை பெற்ற இந்தத் தேர்வை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 949 ஆண்கள், 43 ஆயிரத்து 949 பெண்கள், 43 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 213 பேர் எழுதினர். சென்னையில் மட்டும் 7 ஆயிரத்து 80 ஆண்கள், 1,506 பெண்கள் என 8 ஆயிரத்து 586 பேர் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதித் தேர்வு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் ஆகிய 5 மையங்களில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் திறன் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு கடந்த வாரம் நடைபெற்றது. இதில், மொத்தம் 645 பேர் பங்கேற்றனர். இதில் காவல் துறையைச் சேர்ந்த 89 பேர் உள்பட மொத்தம் 438 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களின் பின்ணணி குறித்த விசாரணை செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்படும். இதில் தகு தியானவர்களே உதவி ஆய்வாளர் பணிக்குரிய பயிற்சிக்கு அழைத் துச் செல்லப்படுவார்கள் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 10035 times, 31 visits today)