இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு



இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையின் (ITBP) தகவல் தொடர்பு பிரிவில் கான்ஸ்டபிள் பணி அந்தஸ்தில் 293 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.பணியிடங்கள் விவரம்:1.    Head Constable (Telecommunication): 126 இடங்கள்.ஆண்கள்- 107 இடங்கள் (பொது-34, பொருளாதார பிற்பட்டோர்- 10, ஒபிசி-44, எஸ்சி-15, எஸ்டி-4).பெண்கள்-19 (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்- 2, ஒபிசி-8, எஸ்சி-2, எஸ்டி-1).சம்பளம்: ரூ.25,500-81,100.வயது: 18 முதல் 25க்குள்.தகுதி: கணிதத்தில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ஐடி/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் ஐடிஐ அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங்2.    Constable (Telecommunication): 167 இடங்கள்.ஆண்கள்- 142 இடங்கள் (பொது-58, பொருளாதார பிற்பட்டோர்-14, ஒபிசி-38, எஸ்சி-21, எஸ்டி-11).பெண்கள்- 25 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2).சம்பளம்: ரூ.21,700-69,100.வயது: 18 முதல் 23க்குள்.தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ/டிப்ளமோ படித்திருப்பது விரும்பத்தக்கது.கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி/எஸ்டியினருக்கு கட்டணம் கிடையாது.www. recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2022.



(Visited 10021 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =