சிவகங்கையில் டிச.16-இல் வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை, டிச. 13: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (டிச.16) தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
காலை 10 மணியளவில் நடை பெற உள்ள இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங் கள் தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். எனவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த இளைஞர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடை யாள அட்டை, ஆதார் அட்டையு டன் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய் யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
(Visited 10030 times, 31 visits today)