மொத்த காலியிடங்கள்: 108
இந்திய விமானப்படையில் டெக்னிக்கல் பிரிவில் அப்ரன்டிஸ் பயிற்சி பெற விரும்பும் ஐடிஐ படித்த ஆண்கள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Airforce Apprenticeship Training Machinist-3, Sheet Metal-15, Welder (Gas & Electric)-4, Mechanic (Radio/Radar Aircraft))/Electronic Mechanic-13, Carpenter-2, Electrician Aircraft-33, Fitter/Mechanic/Machine Tool Maintenance-38.
தகுதி: குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட டிரேடில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படிப்பு முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1.4.2023 தேதியின்படி பொதுப் பிரிவினர் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
உடற்தகுதி: குறைந்தபட்சம் 137 செ.மீ., உயரமும், 25.4 கிலோ எடையும் இருக்க வேண்டும்.
விமானப்படையால் Airforce Apprenticeship Training Test அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஏப்.3ம் தேதி முதல் மகாராஷ்டிரா, நாசிக், ஒஜ்ஹர் விமானப் படை நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் ஒரு வருடம். உதவித் தொகையாக ரூ.8855 வழங்கப்படும்.
www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரரின் ஐடிஐ தகுதி பற்றிய விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.01.2023.