டெல்லியிலுள்ள ராணுவ நல வாரியத்தில் 22 ஜூனியர் கிளார்க் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணி:
Junior Clerk: 22 இடங்கள் (பொது-11, எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் ஒரு இடம் மாற்றுத் திறனாளிகளுக்கும், 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும் அல்லது இந்தியில் 30 வார்த்தைகளும் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது, ஒபிசி மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.delhi.cantt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.01.2023