இந்திய வன ஆராய்ச்சி மையத்தில் டெக்னீஷியன் பணி

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் உத்தரகாண்ட், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி மையத்தில் டெக்னீஷியன் உள்ளிட்ட 72 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள் விவரம்:

1. Technician (Field/ Lab Research): 23 இடங்கள் (பொது-10, எஸ்சி-2, எஸ்டி-2, ஓபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-7). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ்2 தேர்ச்சி.

2. Technician (Maintenance): 6 இடங்கள் (பொது-3, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது வரம்பு: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Information Technology/Electronics Mechanic/ Pump operator cum Mechanic. இதில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ தேர்ச்சி.

3. Technical Assistant (Para Medical): 7 இடங்கள் (பொது-3, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது வரம்பு: 21 லிருந்து 30க்குள். தகுதி: Nursing/Pharmacist/Physiotherapist/Lab Technician/Radiographer ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது 3 வருட டிப்ளமோ தேர்ச்சி.

4. Lower Division Clerk: 5 இடங்கள் (பொது-3, எஸ்டி-1, ஓபிசி-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்கக வேண்டும்.

5. Forest Guard: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ்2 தேர்ச்சி.

6. Stenographer (Grade II): 1 இடம் (பொது). வயது; 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது இந்தி சுருக்கெழுத்தில் எழுத தெரிந்திருக்க வேண்டும். மேலும் Computer Application ல் சான்று பெற்றிருப்பதோடு டைப்பிங் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.

7. Store Keeper: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ்2 தேர்ச்சி.

8. Driver (Ordinary Grade): 4 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் வாகனத்துக்குரிய டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

9. Multi Tasking Staff: 22 இடங்கள் (பொது-10, எஸ்சி-5, எஸ்டி-1, ஓபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-4). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.

உடற்தகுதி: ஆண்கள்- 165 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 79 செ.மீயும், விரிவடைந்த நிலையில் 84 செ.மீயும் இருக்க வேண்டும். மேலும் 4 மணி நேரத்தில் 25 கி.மீ., தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும்.

பெண்கள்- 150 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 74 செ.மீயும், விரிவடைந்த நிலையில் 79 செ.மீயும் இருக்க வேண்டும். மேலும் 4 மணி நேரத்தில் 14 கி.மீ., தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும். கட்டணம்: பொது/ ஓபிசி/ பொருளாதார பிற்பட்டோர் பிரிவினருக்கு ரூ.1,500/-, எஸ்சி/எஸ்டி/ பெண்களுக்கு ரூ.700/-. இதை ஆன்லைனில் செலுத்த வேணடும். https://fri.icfre.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.1.2023.

(Visited 10019 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 5 =