ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் பணி

ndc

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு எட்டாம் வதுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடந்த 1988 ஆம் ஆண்டப மோட்டார் வாகனச் சட்டப்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேணே்டும்.

வாகனங்களை இயக்குவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நடைமுறை பட்டறிவு பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு பழங்குயின பிரிவினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானோர் 2023 ஜூலை 1 ஆம் தேதி 18 வயதை பூர்த்தியடைந்தவராகவும், 42 வயதிற்குட்டவராகவும் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை namakkal.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக 3 ஆவது தளத்தில் உள்ள வளர்ச்சிப் பிரிவில் அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவே விண்ணப்பிக்கலாம்.

(Visited 10024 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 2 =